அக்னிப்புரட்சி இன்றைய (09.03.2021) முக்கிய செய்திகள்.
* மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு.
மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டி.
மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் குமரவேலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்து ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 10 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.
* சட்டமன்ற தேர்தல் - பாமக இன்று அவசர ஆலோசனை:
அதிமுகவுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அவசர ஆலோசனை.
பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் ஆலோசனை.
காணொலி மூலம் ஆலோசனை நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு.
* பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகின்ற 14ம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகின்ற 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
மாத பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5,000 பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க திருவாந்தக்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
* திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி உறுதியானது.
பிறதொகுதிகள் குறித்து மாலை அறிவிக்கப்படும் - காதர்மொய்தீன்.
* தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.
வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
“பிரதமர் பொதுவானவர் என்பதால் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்"-மனுதாரர்.
* புதுச்சேரி திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை.
புதுச்சேரி தி.மு.க அமைப்பாளர் சிவா அறிவாலயம் வருகை. இன்று தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு.
* காவிரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
* அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்.
தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்.
* வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது"
- சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அரசியல் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது"- மனுதாரர்.
10.5 % வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு" - மனுதாரர்.
போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதிகள்.
மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு:
“சுதீஷ், பிரேமலதாவை சந்தித்து அழைப்பு விடுப்பேன்" - மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் பேட்டி.
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகிய நிலையில் அழைப்பு.
* கூட்டணியில் இருந்து விலகியதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது - அமைச்சர் ஜெயக்குமார்.
பலத்திற்கு ஏற்ற மாதிரிதான் பாமக, பாஜகவுக்கு அதிமுக தொகுதிகளை ஒதுக்கியது - அமைச்சர் ஜெயக்குமார்.
ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டக் கூடாது. பிடிக்கவில்லை என்றால் நண்பர்கள் போல் கைகுலுக்கி செல்ல வேண்டும்.
தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துகட்ட முடியும்- அமைச்சர் ஜெயக்குமார்.
* கும்பகோணம் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ. 4,200 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கணேசமூர்த்தி கைது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் பறிமுதல்.
* உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் ராஜினாமா:
ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் திரிவேந்திர சிங் ராவத்.
பாஜக உட்கட்சி பூசல் காரணமாக ராஜினாமா என தகவல்.
" திமுக கூட்டணியில் கேட்ட 3 தொகுதிகள் கிடைத்துள்ளது- இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்.
திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் -காதர் மொய்தீன்.
* குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக சென்னை வருகை.
நாளை மற்றும் நாளை மறுநாள் திருவள்ளுவர், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
* புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட பாமக முடிவு.
5 தொகுதிகளை ஒதுக்க கோரிய பாமகவிற்கு, ஒரு தொகுதியும் ஒதுக்கப்படாததால் அதிருப்தி.
* திமுக கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக-கொமதேக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
3 தொகுதிகளிலும் கொமதேக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment