அக்னிப்புரட்சி இன்றைய (10.03.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 11 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.
* அமமுக வேட்பாளர் பட்டியல்:
முதற்கட்டமாக 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அமமுக.
* அ.தி.மு.கவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.
சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
* அமமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை:
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமமுக சார்பில் பழனியப்பன், மாணிக்கராஜா பங்கேற்பு.
தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர்பங்கேற்பு.
* கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:
தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டி.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மட்டனூர் தொகுதியில் போட்டி.
* உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜக மக்களவை உறுப்பினர் தீரத் சிங் ராவத் நியமனம்.
உத்தரகாண்ட் முதல்வர் பதவியை திரிவேந்திர சிங் ராவத் நேற்று ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் தேர்வு.
* பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு: 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி மீதான புகாரில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஒய்வுபெற்ற காவல் அதிகாரி கே.ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விசாரணையின் போது வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
* திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
* தேர்தல் பிரசாரத்திற்கு சரக்கு வாகனங்களில் மக்களை அழைத்து செல்லக் கூடாது"-போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு.
உத்தரவை மீறி சரக்கு வாகனத்தில் மக்களை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை
விதிமீறினால் 6 மாதம் சிறை, 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்"
ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்"
* தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்- இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனித தன்மையற்ற செயல் - சென்னை உயர்நீதிமன்றம்:
மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
மனிதர்கள் ஈடுபடுத்தும் நடைமுறை தொடர்கிறதா, இல்லையா என்பதை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்குகள் அடுத்த வாரம் ஒத்திவைப்பு.
* திருவள்ளுவரின் உன்னதமான அறவுரைகளை நாம் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு.
* அதிமுக உடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது- சிதம்பரத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு.
பத்தாண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம். இனி நாங்கள் வாழ்வோம் என விஜயபிரபாகரன் பேச்சு.
அதிமுக கூட்டணியில் இருந்து நேற்று தேமுதிக விலகியது.
* சிறப்பு டி.ஜி.பி மீது பாலியல் புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.யை தடுக்க செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் உடன் வந்த காவலர்கள் கூண்டோடு இடமாற்றம்.
எஸ்.பி கண்ணனை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று பிற காவலர்கள் மாற்றம்.
* 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக.
* திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு.
* திமுக கூட்டணியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 6 தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
1.சாத்தூர்
2.பல்லடம்.
3.மதுரை தெற்கு,
4.வாசுதேவநல்லூர்,
5.மதுராந்தகம்,
6.அரியலூர்.
* சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்கட்டமாக 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
1.மதுரவாயல் -பத்மப்ரியா
2. மாதவரம்- ரமேஷ் கொண்டசாமி
3. பெரம்பூர் பொன்னுசாமி
4. வில்லிவாக்கம் -சந்தோஷ் பாபு ஐஏஎஸ்
5. எழும்பூர்- பிரியதர்ஷினி
6. அண்ணாநகர்-பொன்ராஜ்
7. ஆர்.கே நகர்-பாசில்
8. தாம்பரம் -சிவ இளங்கோ
9. திருப்போரூர்- லாவண்யா
10. காஞ்சிபுரம்- கோபிநாத்
11. விருகம்பாக்கம்- ஸ்நேகன்
உள்ளிட்ட 70 வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
* திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கு அவினாசி தொகுதி ஒதுக்கீடு.
மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கீடு.
* அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் (தனி) தொகுதி ஒதுக்கீடு.
அதிமுக கூட்டணி சார்பில் பெரம்பூர் தொகுதியில் என்ஆர் தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டி.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் அறிவிப்பு.
* மூவேந்தர் முன்னேற்ற கழகம் கட்சிக்கு, கும்பகோணம் தொகுதி ஒதுக்கீடு. அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்,
புரட்சிபாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கீடு.
* தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை. எப்போது வேண்டுமானாலும் கூட்டணி உறுதி செய்யப்படலாம் - டி.டி.வி.தினகரன்.
* சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி போட்டியில்லை - ஏ.சி.சண்முகம்
அதிமுக கூட்டணியில் 11 தொகுதிகள் முன்வைத்து 5 தொகுதிகள் கேட்கப்பட்டது. பின் 9 தொகுதிகள் முன் வைத்து அதில் 4 தொகுதிகள் கேட்கப்பட்டது.
இறுதிவரை எங்களுக்கு தொகுதிகளை அதிமுக ஒதுக்காததால், இந்த சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி போட்டியில்லை - ஏ.சி.சண்முகம்.
தொடர் நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி முடிவு.
No comments:
Post a Comment