சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 பா.ம.க இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியல் - பாமக தலைவர் ஜி கே மணி வெளியீட்டாளர்
தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் சற்று முன் வெளியிடப் பட்டது. தொடர்ந்து கீழ்க்கண்ட 9 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்:
வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்
1. 161. மயிலாடுதுறை திரு.சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, எம்.காம், அவர்கள்
மாநில துணைப் பொதுச்செயலாளர்
2. 152. விருத்தாசலம் திரு. ஜே. கார்த்திகேயன் எம்.பி.ஏ, அவர்கள்
மாவட்ட செயலாளர்
3. 19. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திரு. ஏ.வி.ஏ. கஸ்ஸாலி, அவர்கள்
மாநில துணைத் தலைவர்
4. 153. நெய்வேலி திரு. கோ.ஜெகன், பி.ஏ அவர்கள்
மாவட்ட முன்னாள் செயலாளர்
5. 1. கும்மிடிப்பூண்டி திரு. எம்.பிரகாஷ், அவர்கள்
மாநில துணைப் பொதுச்செயலாளர்
6. 39. சோளிங்கர் திரு. அ.ம. கிருஷ்ணன், அவர்கள்
மாவட்ட செயலாளர்
7. 164. கீழ்வேளூர் (தனி) திரு. வேத. முகுந்தன், எம்.சி.ஏ அவர்கள்
மாநில துணைத் தலைவர்
8. 37. காஞ்சிபுரம் திரு. பெ. மகேஷ்குமார், பி.காம். அவர்கள்
மாநில இளைஞர் சங்கச் செயலாளர்
9. 71. மைலம் திரு. சி. சிவக்குமார், எம்.ஏ அவர்கள்
மாநில துணைப் பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment