அக்னிப்புரட்சி இன்றைய (16.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 17 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

* தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.

தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

* ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்:

ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சின்னதுரை வேட்பாளராக அறிவிப்பு.

* பள்ளிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்” - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்:

ஏப்ரல் 6 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என செய்தி பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக; பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்  பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது. ஜனவரி மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. மே மாதம் 3-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே பாடங்களை நடத்துவது சிரமம் நிறைந்ததாக உள்ளது. அதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழங்கம்போல் இயங்கும்” எனக் கூறினார்.

* ஏப்ரல் 6-ஆம் தேதி மட்டும் தேர்தல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருப்பதால் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்; மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை:

தமிழகத்தில் ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவசர ஆலோசனை.

* அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நிபுணர்களை கலந்து ஆலோசித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யலாம்.

கொரோனா பரவலால் நீதிமன்றங்களை திறக்கும் முடிவை திரும்பப் பெற்றுள்ளோம் - நீதிபதிகள்.

* பொதுசின்னம் வழங்க உத்தரவிடக் கோரி சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் வழக்கு:

தேர்தல் ஆணையத்தில் இன்றே விண்ணப்பிக்க கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

வாக்குரிமையை போல் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் முக்கியம்-தலைமை நீதிபதி.

சமக,ஐஜேகே மனுக்களை நாளைக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை:

புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை.

கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை.

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவோம்.

விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி ஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்.

ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்.

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு.

தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வோம்.

* முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம்:

கொரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க  உத்தரவு.

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த தமிழக அரசு உத்தரவு.

* விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அன்பழகன் நியமனம்;

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அன்பழகன் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் - தமிழக அரசு.

* அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது - நிர்மலா சீதாராமன்.

பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களின் நலன், ஓய்வூதியம் பாதுகாக்கப்படும் - நிர்மலா சீதாராமன்.

* 3வது டி20 போட்டி - இங்கிலாந்து அணிக்கு 157 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி; கேப்டன் விராட் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தல்.

* தமிழக சட்டப்பேரவை தேர்தல் - காங்கிரஸ் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

வேளச்சேரி - ஜே.எம்.எச்.ஹஸ்ஸான்

மயிலாடுதுறை - ராஜகுமார்

குளச்சள் - பிரின்ஸ்

விளவங்கோடு - விஜயதாரணி

* புதுச்சேரி 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு:

காலப்பட்டு - கல்யாண சுந்தரம்,

காமராஜர் நகர்- ஜான்குமார்,

நெல்லிதோப்பு- ரிச்சட் (ஜான்குமார் மகன்),

மண்ணாடிப்பட்டு- நமச்சிவாயம்,

ஊசுடு- சாய் சரவணகுமார்,

மணவெளி - ஏம்பலம் செல்வம்,

லாஸ்பேட்டை- சாமிநாதன்.

* புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி,

மணவெளி - அனந்தராமன், 

ஏம்பலம் - கந்தசாமி, 

நெட்டப்பாக்கம் - விஜயவேணி, 

நெடுங்காடு - மாரிமுத்து, 

திருநள்ளாறு - கமலக்கண்ணன்

காரைக்கால் வடக்கு - ஏ.வி.சுப்ரமணியன், 

மாஹே - ரமேஷ், 

ஊசுடு - கார்த்திகேயன், 

கதிர்காமம் - செல்வநாதன், 

இந்திராநகர் - கண்ணன் 

முத்தியால்பேட்டை - செந்தில்குமரன், 

காமராஜ்நகர் - ஷாஜஹான், 

லாஸ்பேட்டை - வைத்தியநாதன்

* புதுச்சேரியில் அதிமுக சார்பாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உப்பளம் தொகுதியில் அன்பழகன்,

உருளையன்பேட்டை தொகுதியில் ஓம் சக்திசேகர்,

முத்தியால்பேட்டை தொகுதியில் வையாபுரி மணிகண்டன்,

முதலியார்பேட்டை தொகுதியில் பாஸ்கர்,

காரைக்கால் தெற்கு தொகுதியில் அசனா.

* இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து  அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages