அக்னிப்புரட்சி இன்றைய (17.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 18 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

* நாடு முழுவதும் தீவிரமடையும் கொரோனா - முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை.

காணொலி மூலம் காலை 11 மணியளவில் தொடங்குகிறது ஆலோசனைக் கூட்டம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்.

* விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி.

மற்ற ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரத்துறை.

அரசு மாதிரி பள்ளி தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அறிவிப்பு.

* தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்திப்பு.

அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்திப்பு.

* தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.

அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்.

அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.

* சட்டப்பேரவை தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலன் போட்டி, தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகமண்டலம் தொகுதியில் போஜராஜன் போட்டி.

* புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடமாட்டார் என அறிவிப்பு.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்  அறிவிப்பு.

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,விசிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

* 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க உத்தரவு.

ஏற்கனவே 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

11ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழப்பம் இருந்த நிலையில், பள்ளி அளவில்
பொதுத்தேர்வு நடத்த உத்தரவு.

ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த அறிவுறுத்தல்.

* கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.

முறையான விதிகளை பின்பற்றாமல் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக மனுதாரர் குற்றச்சாட்டு.

ஜூன் 22-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.

* மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று - முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

அனைத்து மாநிலங்களும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதை தடுக்க வேண்டும் - பிரதமர்.

* எந்த தேர்வும் நடைபெறாது முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு.

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது -பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு.

* அவதூறு வழக்குகள் - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன்.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட 2 வழக்குகளில் உத்தரவு.

ஏப். 16ந் தேதி ஆஜராக ஸ்டாலினுக்கு உத்தரவு.

ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை.

ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு அப்போது பாமக கோரிக்கை வைத்தது.

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுக பொய் பிரசாரம்- ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்கள் சந்திப்பு.

* தமிழ் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் - சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

* தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

மொத்த பாதிப்பு 8,62,374 ஆக அதிகரிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages