அக்னிப்புரட்சி இன்றைய (18.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 18 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

* நாகை மாவட்டம் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றம்.
வேத.முகுந்தனுக்கு பதிலாக  வடிவேல் ராவணன் வேட்பாளராக அறிவிப்பு - ஜி.கே.மணி.

* ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுப்பு - ஆகஸ்டில் மனு விசாரிக்கப்படும் என அறிவிப்பு.

* சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.168 அதிகரித்து ரூ.34,064 ஆக உயர்வு.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,258-க்கும் விற்பனை.

* நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

* வெள்ளதுரையின் மனைவி ராணி ரஞ்சிதம் அம்பாசமுத்திரம் தொகுதி அம‌முக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றம்.

* சேலம் : கொண்டலாம்பட்டி புத்தூரில் சொத்து தகராறில் செல்வம்(40) என்பவர் சுட்டுக்கொலை.
தலைமறைவான தம்பி சந்தோஷுக்கு போலீசார் வலைவீச்சு.

* அதிமுக சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கம்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுயேட்சையாகப் போட்டியிட முடிவு எடுத்ததால் நடவடிக்கை.

பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் வேட்புமனு தாக்கல்.

சீட்டு வழங்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் தோப்பு வெங்கடாசலம்.

* சிபிஎஸ்இ பாட திட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி உள்ளிட்ட பெண் விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இடம் பெற செய்ய வேண்டும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து திமுக எம்.பி., திருச்சி சிவா கோரிக்கை.

* வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி தனது டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷ் பாபு பதிவு.

டிஜிட்டல் முறையில் பிரசாரத்தை தொடருவேன் - சந்தோஷ் பாபு.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கொரோனா தொற்று உறுதி.

* தமிழகத்தில் ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,63,363ஆக உயர்வு.

தமிழகத்தில் மேலும் 9 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,573 ஆக உயர்வு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages