திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்க்கு பார்வைக்கு சில வினாக்கள் - பொங்கலூர் மணிகண்டன்
1. அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த நீங்களே ஊழல் செய்தவர் என்று சொன்ன, 30 குற்றவியல் வழக்குகள் உள்ள கரூர் செந்தில் பாலாஜி, திமுக-வையும் கலைஞரையும் தங்களையும் கடுமையான விமர்சனம் செய்த தங்க தமிழ்ச்செல்வன், சேகர் பாபு, கலைஞரை தள்ளுவண்டி என்று சொன்ன விளாத்திக்குளம் மார்க்கண்டயன் (மணல் கொள்ளை), விழுப்புரம் லட்சுமணன் நீங்களே கண்டெடுத்து இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுத்த தற்போது பிஜேபி வேட்பாளர் சரவணன் போன்ற பலருக்கு வாய்ப்பு கொடுக்கும்போது திமுகவில் உழைத்து பாடுபட்ட பலரும் உங்களால் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமா என்ன.. இது முறையற்ற செயல்தானே. இதற்கு உங்கள் பதில் என்ன?
2. திமுக தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வந்திருக்கவேண்டும் அல்லது கே.கே.எ.ஸ்.எஸ்.ஆர்.ஆர்., எ.வ.வேலு நீங்களே ஊழல் வாதி என்று சொன்ன செல்வகணபதி போன்றோர் சிபாரிசு செய்தால்தான் கிடைக்குமென்றால் சொல்வது உண்மை என்று தான் இதுவரை தெரிகிறது. அதை ஏன் நீங்கள் தடுக்கவில்லை.?
3. அண்ணா நிறுவிய திமுகவில் 12 வருடங்களுக்கு முன்னாடி உங்களுக்கு உறவாகி மருமகன் வந்து திமுகவில் அதிகாரம் செலுத்தக்கூடிய நிலை யாரால். இது சரிதானா..? அவர்தான் அதிகாரத்தின் உச்சம் என்றால் அதுதான் உங்கள் ஜனநாயகமாக…?
4. கிரிமினல் குற்றவள்ளிகள் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், கார்த்திக்கேய சேனாபதி என பல குற்றவாளிகளுக்கு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது திமுக வாய்ப்பு வழங்கியிருக்கிறேதே எப்படி..? கடந்த சட்டமன்றத்தில் கடுமையான குற்றவழக்குகள் கொண்ட 22 எல்.எல்.ஏக்களை மறுபடியும் அதை கூடுதலாக ஆக்கக் கூடிய அளவில் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளீர்கள். குற்றப்பின்னணியில் உள்ளவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
5. திமுகவிற்காக உழைத்த வேலூர் முகமது ஷகி, உதய சூரியன் சின்னத்தை கட்சிக்கு கொடுத்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் நாமக்கல் காந்தி செல்வன், உங்களுக்கு தொண்டாற்றிய விருகம்பாக்கம் தனசேகரன், உங்கள் நிழலாக இருந்த சுகவனம், வீரபாண்டிய ஆறுமுகத்தின் புதல்வர் வீரபாண்டி ராஜா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முத்துராமலிங்கம், பவானி ராஜேந்திரன், ராஜபாளையம் வி.பி.ராஜன், கரூர் சின்னசாமி, அண்ணன் பொங்கலூர் பழனிசாமி, ஈரோடு என்.கே.கே. பெரியசாமி இலங்கையில் பிரச்சினையில் உங்கள் மானத்தை காப்பாற்றிய கே.எஸ்.இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு என நீண்டப் பட்டியலே உள்ளதே. கட்சிக்கு உழைத்த அவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்காமல் புறம் தள்ளுனீர்கள் இது நியாயம் தானா?
6. ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்போம் என்று சொன்னது சரி, த,கிருஷ்ணன், அண்ணா நகர் ரமேஷ் குடும்பம், மதுரை லீலாவதி, 2ஜி விவகாரத்தில் சாதிக் பாட்ஷா, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயக்குமார், பாளையங்கோட்டை மாணவன் லூர்தநாதன், கொல்லப்பட்டத்ற்கு யார் காரணம் இதற்கும் நீதி கேட்க வேண்டாமா? இதற்கும் நீங்கள் பதில் சொல்லியாகவேண்டும்.?
7. இனிக்கோ என்ற திருச்சி இருதயராஜ், கட்சிக்கே சம்பந்தமில்லாத தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியின் நிறுவனத்தின் புதல்வர், பெரம்பலூர் பியுட்டி பார்லரில் பெண்ணை தாக்கிய ரவுடிக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இதுதான் உங்களுடைய ஒழுங்குமுறையா? அல்லது இவர்களை சரி என்று ஏற்றுக்கொண்டீர்களா?
8. சிவ கார்த்திகேய சேனாபதி விருது என்ற நேற்று வரை திமுகவை திட்டிக்கொண்டு காங்கேயத்தில் வலம் வந்தவரை சுற்றுச்சூழல் செயலாளர் ஆக்கினீர்கள். துப்பாக்கி காட்டி மிரட்டியவர் போன்ற வழக்குகள் அவர் மேல் நிலுவையில் உள்ளன. இவர் உங்கள் பார்வையில் பட்டவுடன் நல்லவராகிவிட்டார் அவரும் இன்று தேர்தல் களத்தில் வேட்பாளர்.?
9. இதுவரை கண்டுகொள்ளாத அந்தியூர் செல்வராஜ்-க்கு மாநிலங்களவை உறுப்பினர், துணைப்பொதுச் செயலாளர் என்று இரு பதவிகள். ஏன் கட்சியில் வேறு யாருமே இல்லலையா…?
10. எத்தனை முறை திருச்சி சிவா-விற்கு நாடாளுமன்ற செல்ல வாய்ப்பு அளிப்பீர்கள்? உங்கள் கட்சியில் வேறு யாருமே இல்லையா? கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பே தலைமை வழங்காதா, தங்களால் புறக்கணிக்கப்பட்டு, அமைதியாய் இருக்கின்றவர்களின் எண்ணிக்கையாவது உங்களுக்கு தெரியுமா..?
11. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் யாராவது தமிழக பூகோள பிரச்சினை, தெரிந்தவர்கள் இருந்திருந்தால் குழப்பமில்லாத தேர்தல் அறிக்கையாக இருந்திருக்கும். தேர்தல் அறிக்கை கூட திமுக தயாரிக்க இயலாதக் கட்சியாக இருக்கிறது. அதை வெளியிட்டபின் திருத்தங்கள், இப்படி எந்தக் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்பு திருத்தம் செய்தது இல்லை. இது வேடிகையான் விசயம். திமுகவில் தமிழகப் பிரச்சினைகள் தெரிந்தவர்கள் யாருமே இல்லையா? அப்படி தெரிந்தவர்களைத்தான் நீங்கள் புறக்கணிக்கிறீகள். டி.ஆர்.பாலு தலைமையில் இந்த குழுவிற்கு என்ன தெரியும், ஒன்றும் தெரியாது. என்ன நன்மைகளை மக்களுக்கு என்ன போகிறீர்கள் ?
12. இலங்கை பிரச்சினையில் ஐநா மன்றத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று சொன்னீர்கள், ஆனால், அந்த நடவடிக்கைகளில் மனப்பூவர்மாக இதுவரை ஏன் ஈடுபடவில்லை. ஆனால், கே.எஸ்.ஆர். தனி மனிதனாக ஜெனிவா மன்றத்திற்கு தொடர்ந்து இலங்கை பிரச்சைனையில் குரல் கொடுத்து வருகிறார். ஈழப்பிரச்சினை என்றால் அவரை அழைப்பீர்கள். மற்ற நேரத்தில் அவர் யாரோ.? காங்கிரஸில் இருந்து வந்து வாய்ப்பு பெற்று மக்களவை சென்ற செந்தில்குமாரை வைத்து கொண்டு ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் என்ன நியாயம் கேட்கப் போகிறீர்கள்.?
13. நீங்கள் பொறுப்புள்ள நேர்மையான ஸ்டாலினை பார்க்கப்போகிறீர்கள், பழைய ஸ்டாலின் இப்போது இல்லை என்கிறீர்கள், இதையெல்லாம் பார்க்கும்போது நீங்கள் உயரவில்லை, பக்குவப்படவில்லை என்று தான் தோன்றுகிறது. உங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லுங்கள்.
14. ஒரு அரசியல் இயக்கம் தொண்டர்கள் உழைப்பு மக்களுடைய வரவேற்பில் வளரவேண்டுமேயொழிய ஐபேக்கை வைத்துக்கொண்டு பாசாங்குத் தனமான நடவடிக்கைகள், நடிப்புத் தனமான பேச்சுகள் இயற்கையான நடைமுறையில் இல்லாமல் நடந்து கொள்ளுவது எப்படியாவது பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது தான் ஜனநாயகமா?
இந்த வினாக்கள் தனிபட்ட முறையில் ஸ்டாலின், திமுக என்று கேட்கப்படவில்லை. பொது வெளியில் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கும்போது தகுதியும் தரமும் முக்கியம். அந்த அளவில் ஒரு சாதாரண நபர் கேட்கும் கேள்விகளைத்தான் இந்தக் கேள்விகளை பொதுவெளியில் வைக்கின்றோம். உண்மையான ஜனநாயவாதியாக இருந்தால், திமுக ஜனநாகமான கட்சி என்றால் மருமகன் சபரீசன் அதிகாரக் கொடி பறக்கவில்லை என்று மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லவேண்டியக் கடமை உங்களுக்கு உள்ளது.
மக்களுக்கு சில விடயங்களை சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். உங்களை விமர்சிக்க வேண்டும் என்று இந்த கேள்விகள் கேட்கவில்லை. உண்மைகள் தேர்தல் களத்தில் வெளிப்படவேண்டும் என்ற நிலையில் தான் இந்த வினாக்கள்.
பொங்கலூர் மணிகண்டன்
No comments:
Post a Comment