2021 சட்டமன்ற தேர்தல் வன்னியர்களுக்கு போட்டி அல்ல இறுதிகட்ட போர் - Agnipuratchi

2021 சட்டமன்ற தேர்தல் வன்னியர்களுக்கு போட்டி அல்ல இறுதிகட்ட போர்

Share This

2021 சட்டமன்ற தேர்தல் வன்னியர்களுக்கு போட்டி அல்ல இறுதிகட்ட போர்

அனைத்து வன்னிய சமுதாயத்தினரும் கட்சி பேதம் இல்லாமல் இதனை வாசிக்கவும் 🙏

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கின்றனர் அவர்களுக்கு எல்லாம் வராத ஓர் தைரியம் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார். இந்த தேர்தலில் பா ம க , அ தி மு க கூட்டணி வெற்றிபெறவில்லை என்றால் தோல்வி அவர்களுக்கு அல்ல ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்துக்கே தோல்விதான்.

இதற்கு முன் நம் சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு அதிகமாக தேவைப்படவில்லை ஏனெனில் அதிக நபர்கள் படிக்கவில்லை படித்தாலும் அதிக போட்டியில்லை ஆனால் தற்போதைய நிலை ஒரு காலி பணியிடத்திற்கு பத்தாயிரம் நபர்கள் போட்டி போடுகின்றார்கள் ஆக தனி இட ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் நம் சமுதாய மக்கள் வேலைக்கு செல்ல முடியும்.

இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுவரை ஆட்சி செய்த எந்த தலைவரும் வன்னிய சமுதாயத்திற்கு எந்த நல்லதும் செய்யவில்லை எடப்பாடியார் செய்துள்ளார். இந்த தேர்தலில் அவர் தோற்றால் இனி எந்த அரசியல் தலைவர்களும் இனி எப்போதும் வன்னிய சமுதாயத்திற்கு எந்த நல்லதும் செய்யமாட்டார்கள். அரசியல் தலைவர்கள் என்ன நினைப்பார்கள் என்றால் வன்னிய சமுதாயத்திடம் ஒற்றுமை இல்லை தனி இட ஒதுக்கீடு கொடுத்த எடப்பாடியாரையே வன்னிய இனம் ஒற்றுமை இல்லாமல் தோற்க்கடித்தது இனி இவர்களுக்கு எது செய்தும் எந்த பயனும் இல்லை இனி வன்னியர்களை எப்போதும் போல பிரித்தலும் சூழ்ச்சி செய்து அடிமைகளாகவே வைத்திருப்போம் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவனும் நினைப்பான்.

இந்த தேர்தலில் மட்டும் வன்னியர்களால் எடப்பாடியார் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால் இனி வரும் காலங்களில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்னியர்கள் ஒன்றினைந்துவிட்டார்கள் இனிமேல் வன்னியர்களுக்கு ஏதாவது செய்தால்தான் நமக்கு ஓட்டு விழும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் போட்டி போட்டு நம் வன்னிய சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்வார்கள்.

தயவு செய்து இந்த ஒரு தேர்தலில் மட்டும் அனைத்து கட்சியினை சேர்ந்த வன்னியர்கள் அனைவரும் கட்சி பேதம் பார்க்காமல் பா ம க , அ தி மு க கூட்டணிக்கு வாக்களியுங்கள் இதுதான் படித்து விட்டு வேலை இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் பையன் பெண்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவி , நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.

படித்த இளைஞர்கள் இட ஒதுக்கீட்டினால் இனி வரும் வன்னிய தலைமுறையினருக்கு ஏற்பட போகும் வேலை வாய்ப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து கூறி தங்களால் இயன்ற அளவு வன்னியர் வாக்குகளை எடப்பாடியாருக்கு  அளிக்க வேண்டும்.. சாதி கட்சி என்பதை பெயரளவில் இல்லாமல் உணர்வுபூர்வமாக நிரூபிக்க வன்னிய சொந்தங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு...

வாய்ப்புகளை தவறவிட்டு பின் வருந்துவதில் பயனில்லை.. நமக்காக இல்லையென்றாலும் இனி வரும் நம் வன்னிய தலைமுறையினருக்காக  இம்முறை மட்டுமாவது கட்சி பேதம் பார்க்காமல் வாக்களிக்க வேண்டும்.

ஒன்றை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள் வன்னிய சமுதாயமே எடப்பாடியார் தோற்றால் , இராமதாஸ் தோற்றால் , அன்புமணி தோற்றால் அவர்களுக்கு  எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் வன்னிய சமுதாயத்திற்கு நடுத்தெருதான் உண்டு , மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் போடும் முதல் கையெழுத்து இட ஒதுக்கீடு ரத்து , இனி வன்னியர்கள் ஜென்ம அடிமைகள் என்றே தொடரும் . உங்கள் பிள்ளைகள் அடிமையாக இருக்க வேண்டுமா அரசால வேண்டுமா முடிவு உங்கள் கையில்.

இந்த தேர்தல் வன்னிய சமுதாயத்திற்கு போட்டி அல்ல இறுதிகட்ட போர்.

எழுதியவர் - யாரோ ஒரு மகராசன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages