அக்னிப்புரட்சி இன்றைய (27.03.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.77 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.10 க்கும் விற்பனை.
* அசாம், மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:
அசாமில் 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்காளர்கள் வரிசையாக ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
* நாடு முழுவதும் ஒரே நாளில் 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு.
குணமடைந்தவர்களைவிட புதிய தொற்று பாதிப்பு இரு மடங்காக உயர்வு.
கடந்த 24 மணி நேரத்தில் 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை 5.81 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 1.61 லட்சமாக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 4,52,647 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
* மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பயங்கர வெடிச்சத்தம்.
பயங்கர வெடிச்சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்.
மயிலாடுமுறை, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நில அதிர்வு உணரப்பட்டது.
* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா.
தொற்று பாதிப்பு குறித்து டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.33,856க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,232க்கு விற்பனை.
தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என நடவடிக்கை -மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவு.
* குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக உள்ளது - ராணுவ மருத்துவமனை.
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சீராக உள்ளது.
குடியரசுத் தலைவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
* மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை.
இந்திய தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதித்துள்ளது.
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை வெளியிடவோ கூடாது என உத்தரவு.
* தமிழக சிறையில் காலியாக உள்ள கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட கோரிய வழக்கு.
உள்துறை கூடுதல் தலைமை செயலர், சிறைத்துறை டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்.
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தல்.
* அரசு ஊழியர்களின் சொத்துக்களை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
No comments:
Post a Comment