அக்னிப்புரட்சி இன்றைய (22.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 23 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

💥தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு: தேர்தல் ஆணையம் தகவல்

* சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ்க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதியானது.

* தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் இடையே தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா:

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா.

தஞ்சையில் 2 பள்ளி மாணவர்கள், கும்பகோணத்தில் 10 மாணவர்கள் புதிதாக பாதிப்பு.

கும்பகோணம் கல்லூரியில் மேலும் 5 மாணவர்கள் கொரோனாவால் பாதிப்பு.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்த பாதிப்பு 183ஆக உயர்வு.

* சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா

பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை

ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை

* 9,10,11ஆம் மாணவர்களின் ஆல்பாஸ் உத்தரவை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.

ஆல் பாஸ் உத்தரவுக்கு தடையில்லை என ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவு.

தமிழக அரசின் ஆல்பாஸ் உத்தரவை  ரத்து செய்யக்கோரி நந்தகுமார் என்பவர் வழக்கு.

மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆல்பாஸ் உத்தரவை ரத்து செய்ய மறுத்து விட்டது.

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்தி கொள்ளலாம்- தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

* அதிமுக கூட்டணி முந்துகிறது - தினமணி நாளிதழ் கருத்துக்கணிப்பு

* எச்சரிக்கை!
உங்கள் KYC ஐப் புதுப்பிக்க ஏதாவது எண்ணை அழைக்கும்படியோ அல்லது இலவச மொபைல் டேட்டா தருவதாக வரும் மோசடி செய்திகளில் ஜாக்கிரதையாக இருக்கவும். இந்த செய்திகளில் கொடுக்கப்பட்ட எந்த எண்ணையும் அழைக்க வேண்டாம் அல்லது லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத / சந்தேகத்திற்கிடமான எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள்.
- டீம் ஜியோ

💥தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் திட்டவட்ட அறிவிப்பு.

கொரோனா காரணமாக 6 மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக சில நாளேடுகளில் செய்தி வெளியான நிலையில் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்-தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு
விளக்கம்.

தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை; கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம்.

கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.

💥நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு செயல்படுத்த வாய்ப்பில்லை...
நடுவண் அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

💥கூட்டுறவு வங்கிகள் மூலமாக அதிக வேளாண் கடன் வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.

கடந்த நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமாக ₹18181 கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது
- நாடாளுமன்றத்தில் நடுவண் அரசு தகவல்...

* வரும் 30ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

ஏப். 2ஆம் தேதி மதுரை, நாகர்கோவிலில் பிரதமர் மோடி வாக்குசேகரிக்க உள்ளார்.

வரும் 26ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் பிரசாரம்.

💥பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

சிறந்த நடிகர் (ஆண்) - தனுஷ் (அசுரன்), மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே)

சிறந்த நடிகர் (பெண்) - கங்கனா ரணாவத் (மணிகர்ணிகா)

சிறந்த துணை நடிகர் (ஆண்) - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - டி. இமான் (விசுவாசம்)

சிறந்த குழந்தை தாரை - நாக விஷால் ( கேடி (எ) கருப்பு துரை)
சிறப்பு தேசிய விருது - ஒத்த செருப்பு

💥ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% சிறப்பு இடஒதுக்கீடு - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

💥தமிழக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
இந்து கோவில்களை மேலாண்மை செய்ய தனி வாரியம் அமைக்கப்படும்...
-தமிழக பாஜக தேர்தல் வாக்குறுதி

* தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் - தலைமைச் செயலாளர் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages