அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவையில் எனது சக உறுப்பினருமான முகமது ஜான் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.
முகமது ஜான் மிகவும் எளிமையானவர்; பழகுவதற்கு இனிமையானவர். மாநிலங்களவைக்கு என்னுடன் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் என்னுடன் நன்றாக பழகுவார். அவை நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டக்கூடியவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் முகமது ஜான் ஆவார்.
அதிமுகவில் சாதாரணத் தொண்டராக பணியைத் தொடங்கிய முகமது ஜான் படிப்படியாக உயர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இராணிப்பேட்டை மாவட்டத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகளில் நேற்று நான் பரப்புரை மேற்கொண்ட போது முகமது ஜானை சந்தித்தேன். இந்த நிலையில் எவரும் எதிர்பாராமல் முகமது ஜான் காலமடைந்து இருப்பது அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment