அக்னிப்புரட்சி இன்றைய (23.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.03.2021) முக்கிய செய்திகள்.

* தில்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சட்ட முன்வரைவு மக்களவையில் நிறைவேற்றம்

* அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தில் உள்ள பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த நபர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - காவல் அதிகாரி உள்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 24 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

*:கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது தாக்குதல்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் கழுத்தில் கத்தி வைத்து தாக்கியதாக மீனவர்கள் புகார்.

நடுக்கடலில் 15 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வெறிச்செயல்.

3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்ற கடற்கொள்ளையர்கள்.

* ஜெர்மனியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது:

ஈஸ்டர் விடுமுறைகளில் 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு.

* கொரோனா பரவல் தடுப்பு பணி குறித்து தலைமைச்செயலாளர் ஆலோசனை:

மருத்துவ நிபுணர் குழுவுடன் சென்னை
தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம்.

நோய் தடுப்பு பணி, தடுப்பூசி போடும் பணியை மேலும் வேகப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை.

* கொரோனா காலத்திய கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது" - கடனுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

* பிரசாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க கடும் விதிகளை வகுக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்.

💥ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி:

இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக  கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநாவில் நிறைவேறியது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன; இந்தியா உள்பட 14 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன.

தீர்மானத்துக்கு ஆதரவாக பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், டென்மார்க், தென் கொரியா, அர்ஜெண்டினா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்தன.

இலங்கை போர்க்குற்றங்கள்  குறித்த இங்கிலாந்து முன்மொழிந்த தீர்மானம்:

ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேறியது; இந்தியா வாக்களிக்கவில்லை

பிரேசில், தென்மார்க் உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவாகவும் (இலங்கைக்கு எதிராக) சீனா, பாக்கித்தான், ருசியா உள்ளிட்ட நாடுகள் எதிராகவும் (இலங்கைக்கு ஆதரவு) வாக்களித்தனர்.

இந்தியா, சப்பான், நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்குக் கொள்ளவில்லை.

💥போர்குற்றம் தொடர்பாக நீதியை நிலை நாட்டுவதாக இலங்கை அரசு அளித்த கடந்தகால வாக்குறுதிகள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன என அமெரிக்கா குற்றச்சாட்டு

* அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் காலமானார்:

வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது மாரடைப்பால் மரணம்.

2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு.

* மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படமான 'தலைவி' படத்தின் முன்னோட்டம் வெளியானது

* மதுரையில் கட்டிய AIIMS மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துள்ளேன் எனக் கூறி ஒரு செங்கலை காட்டிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

💥நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வெருவித் தொற்று
ஏப்ரல் 1 ம் தேதி புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் நடுவண் அரசு அறிவிப்பு

இலங்கையின் 2009 போர் குற்றங்கள் குறித்து எழுப்பப்பட்ட தீர்மானத்தின் போது தெளிவின்றி பூசி மொழுகியவாறு பதியப்பட்ட இந்தியாவின் உரை

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்புச் செய்திருப்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் - திமுக தலைவர் முக ஸ்டாலின்

* சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்து அறிவிப்பு

* புனேவில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.

அறிமுக ஆட்டத்திலேயே 4 முக்கிய விக்கெட்களை சாய்த்து இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா அபாரம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages