அக்னிப்புரட்சி இன்றைய (24.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் கடந்த 24 நாட்களாக விலை மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோல், லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து, 92.95 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

💥 தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா.

திருப்பனந்தாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பாதிப்பு.

திருவையாறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு தொற்று.

💥கோவை பீளமேடு பகுதி்யில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொரோனா காரணமாக மூடல்

ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு  கொரோனா வெருவித் தொற்று பரவியதை அடுத்து வங்கிக்கிளை மூடப்பட்டது.

💥தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!

மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, வீரப்ப மொய்லி உள்ளிட்ட தலைவர்களும் தமிழகம் வருகை தர உள்ளனர்

* மன்னார்குடி அமமுக வேட்பாளர் காமராஜ் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்  அவரது மகன் தந்தைக்காக Pressure Cooker சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வு மன்னார்குடி தொகுதி முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

* ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரச்சாரம்.

28ஆம் தேதி சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் நடக்கிறது.

💥 தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை உருவாகியுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் - தமிழக சுகாதாரத் துறை.

புதுச்சேரியில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 40,645 ஆக உயர்ந்துள்ளது.

* அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயர் பரிந்துரை

பரிந்துரைக் கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார், எஸ்.ஏ போப்டே

தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே ஏப்.23ல் ஓய்வு பெறுகிறார்.

என்.வி.ரமணா நியமிக்கப்படும் நிலையில் 2022 ஆகஸ்ட் வரை தலைமை நீதிபதி பதவியில் இருப்பார்.

💥 தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத்துறை உத்தரவு.

தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து உத்தரவு.

* வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி?"

"ஆளுங்கட்சி என்றால் அமைதி காக்குமா தேர்தல் ஆணையம்?"

விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* வாக்காளர்களின் மொபைல் எண்ணை சட்டவிரோதமாக பெற்று பிரசாரம் செய்வதாக  புகார்.

புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  தலைவர் ஆனந்த் தொடர்ந்த வழக்கு மார்ச் 26க்கு தள்ளிவைப்பு.

* அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்.

வழக்கு தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

* தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது?

தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுமா?

திமுக தொடர்ந்த வழக்கில் மார்ச் 29ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது தொடர்பாக அரசியல் கட்சிகள் கூட்டத்தை இந்த வாரமே கூட்ட வேண்டும்.

💥 மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிய வகை உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவது அலைக்கும் இதற்கும் தொடர்பா என ஆய்வுகள் தீவிரம்.

புதியதாக கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனா வைரஸ் “Double Mutant Variant"  என்று மத்திய சுகாதாரத்துறை வகைப்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் - ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.

* கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் இடமாற்றம்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை இடமாற்றம் செய்தது தேர்தல் ஆணையம்.

கோவை மாவட்ட புதிய ஆட்சியராக நாகராஜன், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்.

💥 தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் 1500 -யை தாண்டியது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636 பேருக்கு கொரோனா தொற்று - 12 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 8.71 லட்சம் பேர் பாதிப்பு - 12,630 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 9,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரேநாளில் 633 பேருக்கு கொரோனா தொற்று, 5 பேர் உயிரிழப்பு.

சென்னையில் இதுவரை 2.43 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு.

சென்னையில் 3,751 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 4,211 பேர் உயிரிழப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages