அக்னிப்புரட்சி இன்றைய (26.03.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.77 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.10 க்கும் விற்பனை.
* சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது.
முதியவர்களிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறப்படுகிறது - 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம்.
80 வயது மேல் உள்ள முதியவர்களிடம் தபால் வாக்கு பெறப்படுகிறது.
* பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார்.
வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
* தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை.
சென்னை தலைமைச்செயலகத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
* பாஜக மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது?
புதுச்சேரி வாக்காளர்களின் தெலைபேசி எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? - சென்னை உயர்நீதிமன்றம்.
பாஜகவிற்கு எதிரான புகாரை விரைவாக விசாரிக்க வேண்டும் - ஆதார் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
புதுச்சேரியில் வாக்காளர்களின் தொலைபேசி எண்களை பெற்று பாஜக பிரசாரம் செய்ததை எதிர்த்த வழக்கில் உத்தரவு.
* 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவிப்பு.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் - 108, பண்ட் - 77, விராட் கோலி - 66 ரன்கள் எடுத்தனர்.
* 2வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வென்றது.
தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
No comments:
Post a Comment