அக்னிப்புரட்சி இன்றைய (25.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.03.2021) முக்கிய செய்திகள்.

* பெட்ரோல் 18 காசுகள் குறைந்து லிட்டர் 92.77 ரூபாயாகவும், டீசல் 19 காசுகள் குறைந்து லிட்டர் 86.10 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

* ஆழித்தேரோட்டம் துவங்கியது:
பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில்  ஆழித்தேரோட்டம்.

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி முக்கிய வீதிகளில் பவனி வரும் ஆழித்தேர்.

ஆடி அசைந்து வருகின்றது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேர்.

* பிரேமலதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை தகவல்.

சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.

* இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் மேலும் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -  251 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் 1,17,87,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,12,31,650 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து மேலும் 26,490 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3.95 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,60,692 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை.

* ஜெயலலிதாவின் வாரிசு மு க ஸ்டாலின்!: திருமாவளவன்

கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின். திமுகவை கட்டுப்பாடாக நிர்வகித்து செல்வதில் ஜெயலலிதாவை பிரதிபலிக்கிறார் - விசிக தலைவர் திருமாவளவன்.

* அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த‌தாக தொடரப்பட்ட வழக்கு:

திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தனி நபரை அவதூறாக பேச மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - நீதிமன்றம் நிபந்தனை.

உறுதிமொழி பத்திரத்தை மீறி செயல்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் - நீதிமன்றம் உத்தரவு.

* எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை:

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

* புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் அமைச்சரவை பரிந்துரை நிராகரிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.

அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைப்பு - உயர்நீதிமன்றம்.

* தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட வேண்டும்.

தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசிற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம் -தேர்தல் ஆணையம் உத்தரவு.

சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* திமுக எம்.எல்.ஏ., எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4 மணி நேரமாக வருமான வரி சோதனை.

சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

எ.வ.வேலுவின் இல்லம், பள்ளி, கல்லூரிகள், அறக்கட்டளை, நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் தொடரும்  சோதனை.

திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு போட்டியிடுகிறார்.

திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், வருமான வரி சோதனையால் பரபரப்பு.

* திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் வருமான வரித்துறை சோதனை - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

ஸ்டாலின் தங்கியிருந்த போது சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது.

தோல்வி பயத்தின் காரணமாகவே, மத்திய அரசை அதிமுக தூண்டி விட்டுள்ளதாக துரைமுருகன் குற்றச்சாட்டு.

* வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது - சத்ய பிரதா சாகு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages