சப்பானிலிருந்து வந்த வாழ்த்து! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சப்பானிலிருந்து வந்த வாழ்த்து! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சப்பானிலிருந்து வந்த வாழ்த்து! - மருத்துவர் இராமதாசு அய்யா

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து  சப்பானில் சென்று பணியாற்றுபவரும்,  அங்கு சப்பான் தமிழ்ச் சங்கத்தை  நிறுவி நடத்தி வருபவருமான   பாலமுருகன்  நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வன்னியர்களுக்கு 10.50%  இடப்பங்கீடு  பெற்றுத்தந்ததற்காக நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

’’செஞ்சி வட்டம், சே.பேட்டை கிராமத்தில் இருந்து இடஒதுக்கீட்டின் பயனாக முதல் தலைமுறை பட்டதாரியாக பொறியியல் படித்து அயல்நாட்டில் வேலை செய்து வருவது அய்யா பெற்றுத்தந்த அந்த இடஒதுக்கீடுதான்.
மேலும் அயராது, கடும் உழைப்பு, போராட்டம் என சொல்லி மாளாத அளவிற்கு போராடி வன்னியர்களுக்கு என்று தனியாக 10.5% சதவீதம் பெற்றுத்தந்த எங்கள் சமூக நீதி காவலரான  மருத்துவர் அய்யா அவர்களுக்கு என் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப்போல் பல லட்சம் குடும்பங்கள் உயர்வுபெற இந்த இடஒதுக்கீடு மேலும் உறுதி செய்தது மட்டுமல்லாமல் இந்த ஊமைசனங்களையும் தலைநிமிர செய்தீர்கள். உங்களால் உயர்ந்தோம், உங்களால் உயர்வு பெற்றோம் அய்யா. நன்றிகள் அய்யா” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages