பின்னோக்கிப் பார்க்கிறோம்...
பிரமிப்படைகிறோம்....
பெருமைப்படுகிறோம்....
இது தான் பாட்டாளி மக்கள் கட்சி! - மருத்துவர் இராமதாசு அய்யா.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல.... ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாட்டாளி மக்கள் கட்சி தான் வித்தியாசமான கட்சி என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா?
நீர் மேலாண்மை குறித்து இன்று பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே பேசியது மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
2002-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் நீர்வள ஆதாரங்கள் மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கத்தை என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு சென்னையில் நடத்தியது. எனது தலைமையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்புரையாற்ற நடந்த நிகழ்ச்சியில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜுன்சரண் சேத்தி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் தாரியா, நீர்வள வல்லுனர்கள் பழ. கோமதிநாயகம், ஆர். ஜனகராஜ், முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான கட்சிகள் உள்ளன. அவற்றில் எந்தக் கட்சிக்காவது 20 ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்தனை வந்திருக்குமா? குறைந்தபட்சம் இப்போதாவது நீர்வள மேலாண்மை குறித்து தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு போதிய புரிதல் இருக்கிறதா?
பதில் தேடுங்கள்... பா.ம.க.வின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment