அதிமுக எம்.பி முகமது ஜான் மறைவுக்கு மருத்துவர் ச. இராமதாசு அய்யா இரங்கல் - Agnipuratchi

அதிமுக எம்.பி முகமது ஜான் மறைவுக்கு மருத்துவர் ச. இராமதாசு அய்யா இரங்கல்

Share This

அதிமுக எம்.பி முகமது ஜான் மறைவுக்கு மருத்துவர் ச. இராமதாசு அய்யா இரங்கல்

அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அதிமுகவின் சிறுபான்மை சமுதாயத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான முகமது ஜான் மிகவும் எளிமையானவர். மக்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவர். அவரது மறைவு அதிமுகவுக்கு இழப்பாகும்.

மறைந்த முகமது ஜான் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அதிமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages