அக்னிப்புரட்சி இன்றைய (01.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.

* நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில்  தடுப்பூசி போட்டுக்  கொள்ளலாம்.

இந்தியாவில் இதுவரை சுமார் 5 கோடி பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

*மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் 2ம் கட்ட தேர்தல்-வாக்குப்பதிவு துவக்கம்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு.

அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

* சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிகுறைப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தது மத்திய அரசு.

* நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது:

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.

51-வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

* அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று, நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை - மத்திய அரசு அரசாணை வெளியீடு.

* புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி?

விளக்கம் அளிக்க ஆதார் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஆதாரில் இருந்து செல்போன் எண்களை எடுத்து பாஜக பிரசாரம் செய்வதாக வழக்கு.

வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்ததாக  பா.ஜ.க தரப்பு வாதம்.
பா.ஜ.க தரப்பு வாதத்தை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்த பா.ஜ.க.வின் நடவடிக்கை தனிமனித உரிமை மீறல் - உயர்நீதிமன்றம்.

* உச்ச நட்சத்திரமும், என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் - கமல்ஹாசன்.

* தாதாசாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்தை 'தலைவா' என குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து:

அனைத்து தலைமுறையினரையும் தனது நடிப்பால் கவர்ந்தவர், ரஜினிகாந்த்.

தலைவாவுக்கு தாதாசாகேப் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி.

* தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து.

திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம்.

மேலும் பல விருதுகள் பெறவும், எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி.

* இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்துக்கு விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்-தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது.

நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள் - ஸ்டாலின்.

* வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.

விநியோகித்த 3,46,519 விண்ணப்பங்களில் 1,32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

* இயக்குநர் சங்கர், பிற படங்களை இயக்க கூடாது என இடைக்காலத் தடை விதிக்க முடியாது:

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியன்-2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்கும் வரை பிற படங்களை இயக்க அனுமதி கூடாது - மனுதாரர்.

கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்திற்கு 150 கோடி பட்ஜெட்- மனுதாரர்.

ஆனால் இதுவரை இந்தியன்-2 படத்திற்கு 236 கோடி வரை செலவு - மனுதாரர்.

இயக்குநர் சங்கருக்கு 40 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில், இதுவரை ரூ.14 கொடுக்கப்பட்டது - மனுதாரர்.

* முதல்வர் குறித்த விமர்சனத்திற்கு ஆ.ராசா அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை - தேர்தல் ஆணையம்.

இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை. நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயர் நீக்கம் - இந்தியத் தேர்தல் ஆணையம்.

* தாதாசாகேப் விருது வழங்கியதற்காக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி - நடிகர் ரஜினிகாந்த்.

வாழ்த்து தெரிவித்த பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிக்கட்சி தலைவர், நண்பர் கமல் உள்ளிட்டோருக்கு நன்றி.

என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், உலகெங்கும் உள்ள எனது ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

திரையுலகிற்கு என்னை அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய என் குருநாதர் கே.பாலச்சந்தருக்கு விருது சமர்பணம் - நடிகர் ரஜினிகாந்த்.

* தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் மாதத்தில் ரூ.7,579 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை விட 23% அதிக ஜிஎஸ்டி வரி வசூல்.

தமிழகத்தில் சென்ற ஆண்டு மார்ச்சில் ரூ.6,177 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு ரூ.7,579 கோடி வசூல்- மத்திய நிதியமைச்சகம்.

* முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரத்தின்போது
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பிரசாரத்தின்போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நீண்ட நேரம் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது.

பொதுமக்கள் சிரமத்தை குறைக்க வேண்டும் என டிஜிபி, காவல் ஆணையருக்கு அறிவுறுத்தல்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.33,904க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.76 உயர்ந்து ரூ.4,238க்கு விற்பனை.

* பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு.

தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை. அவசரமாக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு.

* திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு.

அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர் காரில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக புகார்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா தொற்று:

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு.

கொரோனாவிலிருந்து மேலும் 1,634 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 8.89 லட்சம் பேர் பாதிப்பு - 12,738 பேர் உயிரிழப்பு.

* கரூர் ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் மாற்றம்:

தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவு.
கரூர் ஆட்சியராக பிரசாந்த் வடநேரே நியமனம். கரூர் எஸ்.பி.யாக சஷாங் சாய் நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages