"தி இந்துவின் திசைதிருப்பும் (misleading) தலைப்பு: வன்னியர் இடஒதுக்கீடு ஒழிக்கப்படுமா?" - Agnipuratchi

"தி இந்துவின் திசைதிருப்பும் (misleading) தலைப்பு: வன்னியர் இடஒதுக்கீடு ஒழிக்கப்படுமா?"

Share This

"தி இந்துவின் திசைதிருப்பும் (misleading) தலைப்பு: வன்னியர் இடஒதுக்கீடு ஒழிக்கப்படுமா?"

ஒரு தலைப்புக்கு கீழே உள்ள செய்தியை, அந்த செய்திக்கான தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். மாறாக திசைதிருப்பக் கூடாது என்பது இந்திய பத்திரிகை கவுன்சிலின் வழிகாட்டு நெறியாகும் (Headings must reflect and justify the matter printed under them - Press Council of India's norms of Journalistic Conduct).

ஆனால், வன்னியர் இடஒதுக்கீடு குறித்த துணை முதல்வரின் பேட்டிக்கு நேரெதிரான திசைதிருப்பும் தலைப்பை வைத்துள்ளது தி இந்து.

வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானது (Vanniyar quota is provisional) என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியதாக ஒரு செய்தியை தி இந்து  வெளியிட்டுள்ளது (அதனை எழுதியவர் வன்னியர்களுக்கு எதிரான வன்மம் பிடித்த டி.ராமகிருஷ்ணன் என்பவராகும்).

தி இந்துவின் இந்த தலைப்பை மட்டும் படிப்பவர்கள், 'வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானது. தேர்தலுக்கு பின்னர் வன்னியர் இடஒதுக்கீடு எடுக்கப்பட்டுவிடும்' என்றுதான் புரிந்துகொள்வார்கள். ஏனெனில், திமுகவின் பி.கே. கோயபல்ஸ் கும்பல் அப்படி தான் கட்டுக்கதைகளை கட்டி வைத்துள்ளது.

ஆனால், 'இப்போதைய 10.5% இடஒதுக்கீடானது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு வன்னியர்களின் மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்' என்று துணை முதலமைச்சர் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். (on the completion of the census, the quantum of reservation which would be in proportion the their population)

அதாவது, இப்போதைய 10.5% இடஒதுக்கீடு தொடரும்.  சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் இந்த அளவு இதற்கு மேலாகவும் அதிகமாக வாய்ப்புள்ளது (ஏனெனில், வன்னியர் மக்கள் விகிதம் இதனை விட அதிகம்) என்பதே உண்மை ஆகும்.

துணை முதலமைச்சர் பேட்டியில் உள்ள ஒரு கூடுதல் செய்தி:  வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு 6 மாதமோ, 6 வருடமோ காலநிர்ணயம் எதையும் அவர் கூறவில்லை. மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே மாற்றி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலம், வன்னியர் இடஒதுக்கீடு நிரந்தரமாக நீடிக்கும் என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மருத்துவர் இராமதாசு அவர்கள் கட்டாயப்படுத்தியதால் தான் உடனடியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார் (இதன் மூலம் தன்னால் தான் இடஒதுக்கீடு வந்தது என்று பிதற்றும் சில பைத்தியங்களுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்)

-------------
"இது மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கை"

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு என்பது போதுமானது அல்ல. எனவே, 'சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீடு அளவினை மாற்றியமைப்போம் என்கிற உறுதி மொழியினை சட்டப்பேரவையில் கூற வேண்டும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கோரிக்கை வைத்ததே மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தான்.

மருத்துவர் அய்யா அவர்களின் கோரிய படிதான் 'வன்னியர் இடஒதுக்கீடு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாற்றி அமைக்கப்படும்' என்கிற வாக்குறுதியே அளிக்கப்பட்டது.

இதன் மூலம், 1. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு. 2. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இடப்பங்கீடு எனும் இரட்டை வெற்றியை மருத்துவர் அய்யா அவர்கள் அடைந்துள்ளார்கள்.

அதாவது, வன்னியர்களுக்கான விகிதாச்சார இடஒதுக்கீட்டை மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிகொள்ளவில்லை. இதுவரை போதுமான இடஒதுக்கீட்டை பெறாத எல்லா சமூகங்களுக்கும் இடஒதுக்கீட்டு கிடைக்கும் நிலையை சாத்தியமாக்கியுள்ளது பாமக.

மருத்துவர் அய்யா அவர்களின் இந்த மாபெரும் வெற்றியையே பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறது திமுக கோயபல்ஸ் கும்பல். அந்த பித்தலாட்ட பிரச்சாரத்துக்கு துணை போகிறது தி இந்து கும்பல்.

-------------
கட்டுக்கதையும் - உண்மையும் (விரிவாக)
-------------

"கட்டுக்கதை:"

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது. 6 மாத காலத்திற்கு தான் செல்லும். அதன் பிறகு காலாவதியாகிவிடும் என்கிறார்களே?

"கட்டுக்கதைக்கு எதிரான உண்மை:'

தேர்தலுக்கு பின் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு எடுக்கப்பட்டுவிடும் என்பது ஒரு அப்பட்டமான கட்டுக்கதை. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானமான பிரச்சாரம்.

தேர்தலுக்கு பின்னரோ, அல்லது ஆறுமாத காலத்திலோ இந்த சட்டம் மாற்றப்பட்டுவிடும் என்பது எந்த இடத்திலும் இல்லை. 

'வன்னியர் 10.5% இடஒதுக்கீடு ஒரு தற்காலிக ஏற்பாடு. ஆறு மாத காலத்திற்குள் முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்த பின்னர் வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப  இடஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும்' என்பதாக தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் வாக்குறுதி அளித்தார்.

இதைத்தான் 'வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் 6 மாதத்தில் காலாவதியாகிவிடும். இதனால் வன்னியர்களுக்கு எந்த பயனும் இல்லை' என்று கட்டுக்கதைகளை அள்ளி விடுகிறார்கள். இந்தக் கட்டுக்கதையில் மயிரிழையளவு கூட உண்மை இல்லை.

தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தில்  (ACT No. 8/2021) எந்த கால எல்லையும் இல்லை. 6 மாத காலத்தில் இந்த சட்டம் காலாவதி ஆகிவிடும் என்கிற குறிப்பு எதுவும் புதிய சட்டத்தில் இல்லை. எனவே, இப்போதைய சட்டம், இதற்கு மாற்றாக இன்னொரு சட்டம் நடைமுறைக்கு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும்.

அதாவது, தமிழ்நாடு அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்து, தமிழக சாதிகளின் முழுமையான புள்ளிவிவரங்கள் கண்டறியப்பட்டு, புதிதாக மீண்டும் ஒரு சாதிவாரி இடஒதுக்கீட்டு சட்டம் இயற்றப்படும் வரைக்கும் இப்போதைய சட்டம் செயல்பாட்டில் இருக்கும். அதற்கு 6 மாதம் ஆனாலும் சரி, 6 வருடம் ஆனாலும் சரி, அதுவரை இந்த சட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

அப்படி ஒரு புதிய சட்டம் வரும்போது அதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு 10.5% அளவுக்கும் கூடுதலாகத்தான் இருக்குமே தவிர, குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

மொத்தத்தில், வன்னியர்களுக்கு 10.5% அளவுக்கு கூடுதலான இடஒதுக்கீட்டை அளிக்கும் இன்னொரு சட்டம் தான், இப்போதையை சட்டத்தை மாற்றியமைக்குமே தவிர, இப்போதைய வன்னியர் 10.5%, MBC & DNC 7%, இதர MBC 2.5% இடஒதுக்கீடு சட்டம் தானாக ஒருபோதும் காலாவதி ஆகாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages