அக்னிப்புரட்சி இன்றைய (03.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.

* புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி வரை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் வரும் 7ம் தேதி காலை வரை மதுபான கடைகளுக்கு சீல் வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

* தேனி அருகே அதிமுக நிர்வாகி குறிஞ்சிமணி வீட்டில் வருமானவரி சோதனை.

தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு.

போடிநாயக்கனூரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடரும் சோதனை.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், பல இடங்களில் தொடரும் ஐடி ரெய்டு.

* திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் வீட்டில் வருமானவரி சோதனை.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.வி.கோட்டையில் உள்ள இல்லத்தில் சோதனை.

* ஈரோடு: அந்தியூர் அருகே தோப்பூரில் அதிமுகவினருக்கு சொந்தமான பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

பள்ளியில் பணப்பட்டுவாடா செய்வது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாக கிடைத்த புகாரால் நடவடிக்கை.

* திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி:

தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்த நிலையில்,தொற்று பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்.

இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல உள்ளார் கனிமொழி.

*:கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு.

* தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்.

* வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது:

விதிமீறினால் 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.

* நாளை இரவு 7 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும்.

நாளை இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தல்.

தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தல்.

*;ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு.

தேர்தல் நடத்தை விதிமீறி மசூதி அருகே பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படை புகார்.

புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தனர் கோடம்பாக்கம் போலீசார்.

* தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்- தலைமை செயலர்.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்று வரை 54.78 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெறப்பட்டுள்ளது -ராஜீவ் ரஞ்ஜன்.

* நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில் வரும்14ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக் கூடிய ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம் - அறங்காவலர் குழு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages