அக்னிப்புரட்சி இன்றைய (07.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.

* இந்தியாவில் மேலும் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 630 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் 1,28,01,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,17,92,135 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,66,177 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை.

கொரோனாவிலிருந்து மேலும் 59,856 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.

தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவு.

குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவு- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

தமிழகத்தில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவான முதல் 5 தொகுதிகளும் சென்னை மாவட்டத்தில்தான் உள்ளன.

வில்லிவாக்கம் - 55.52%
தி.நகர் - 55.92%
வேளச்சேரி - 55.95%
மயிலாப்பூர் - 56.59%
அண்ணாநகர்- 57.02%

* நட்சத்திர தொகுதிகள்: எங்கெங்கு எத்தனை சதவீத வாக்குப்பதிவு?

முதல்வர் பழனிசாமி - எடப்பாடி - 85.6%

மு.க.ஸ்டாலின் - கொளத்தூர் - 60.52%

துணை முதல்வர் - ஓ.பி.எஸ். - 73.65%

ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் - கோவை தெற்கு - 60.72%

டி..டி.வி. தினகரன் - கோவில்பட்டி - 67.43%

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் - திருவொற்றியூர் - 65%

* சரத்குமார், ராதிகாவுக்கு ஓர் ஆண்டு சிறை.

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது  - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

சிபிஐ ஆவணங்களை தாக்கல் செய்யும்வரை விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என காவலர்கள் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க உத்தரவு.

💥தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலின் இறுதி வாக்குப்பதிவு விவரத்தை  வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

அதன்படி, தமிழகத்தில் 72.78 % வாக்குகள் பதிவு

* அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது - சென்னை உயர் நீதிமன்றம்.

தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

பல்கலை. வாரியாக முழு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.

* பஞ்சாப் மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு நடவடிக்கை.

பஞ்சாப்பில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை.

ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி பங்கேற்பு.

தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் வதந்தியே;

அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - தமிழக சுகாதாரத்துறை.

* தமிழகத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று:

தமிழகத்தில் ஒரேநாளில் 3,986 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 17 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9.11 லட்சம் பேர் பாதிப்பு - 12,821 பேர் உயிரிழப்பு.

* கொரோனா தடுப்பூசி முகாம்களை பணியிடங்களில் நடத்த மத்திய அரசு அனுமதி: 

அரசு, தனியார் அலுவலகங்களில் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் 100 பேருக்கு மேல் இருந்தால், தடுப்பூசி முகாம்களை அமைக்க மத்திய அரசு அனுமதி.

ஏப்ரல் 11ஆம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி.

* ஏப்ரல் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இலவச தரிசனம் ரத்து
-திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நடவடிக்கை.

* “தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சி - பிரதமர் மோடி அழைப்பு:

கொரோனாவால் மாணவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை எனவே, தற்போது உங்களை வீடியோ மூலம் சந்திக்கிறேன்.

தேர்வு மட்டுமின்றி, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பேசுவோம்  - பிரதமர் மோடி.

மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல.

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை.

தேர்வுக்கு தயாராகும் போது ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடுவது எப்படி? - மாணவர்கள் கேள்வி.

தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல.
அளவுக்கு அதிகமாக யோசிப்பதால் தான் பயம் வருகிறது - பிரதமர் மோடி.

* கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை.

மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும்.

கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் - நீதிபதிகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages