அக்னிப்புரட்சி இன்றைய (08.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.
* பேருந்து கவிழ்ந்து விபத்து 3 பேர் உயிரிழப்பு:
கடலூர் - சிதம்பரம் சாலையில் மேட்டுப் பாளையம் என்ற இடத்தில் அரசு பேருந்து மீது மீன் லாரி மோதி விபத்து.
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு- 17 பேர் படுகாயம்.
* கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவை தடுப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.
கொரோனா அதிகம் பரவி வரும் 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு.
* பிரதமர் மோடிக்கு 2வது டோஸ் தடுப்பூசி.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
* இந்தியர்கள் நியூசிலாந்து வர தடை:
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்து வர அனுமதியில்லை- நியூசிலாந்து அரசு.
* இந்தியாவில் மேலும் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 625 பேர் உயிரிழப்பு.
இந்தியாவில் 1,29,28,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,18,51,393 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 16,68,62 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை.
கொரோனாவிலிருந்து மேலும் 59,258 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9,10,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,15,386 ஆக உயர்வு.
சென்னையில் மேலும் 1,520 பேருக்கு கொரோனா பாதிப்பு.
* திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் துரைமுருகன்.
துரைமுருகன், 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாக தகவல்.
* தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை - தமிழக அரசு.
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி - தமிழக அரசு.
ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசு.
அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி.
ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.
ஏப்ரல் 10 தேதி முதல் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை.
பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை.
தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
வாடகை டாக்ஸியில் ஓட்டுனர் தவிர மூன்று பேர் அமர்ந்து செல்ல அனுமதி.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பேர் அமர்ந்து செல்ல அனுமதி.
* 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? - அதிகாரிகள் ஆலோசனை.
12ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை.
* தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது?
கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஊழல் வழக்குகளை கையாண்டுள்ளது?
3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* கொரோனா தடுப்பு கட்டுப்பாடு அறிவிப்பால் வருகிற 12ம் தேதி நடைபெற இருந்த புதுக்கோட்டை நார்த்தாமலை கோயில் தேரோட்ட திருவிழா ரத்து.
ஏப்.12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை ரத்து - மாவட்ட ஆட்சியர்.
* கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு:
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு - சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம் தர்மடத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
💥தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வெருவித் தொற்றின் தாக்கத்தை குறைக்க மாவட்ட வாரியாக மூத்த குடிமைப் பணியில் அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்.
அக்னிப்புரட்சி செய்திகள்:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி - மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி
ஆலோசனை.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 35 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.
35 மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு.
* கொரோனாவிலிருந்து மீண்டார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சன் டெண்டுல்கர்.
மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீடு திரும்பினார் சச்சின் டெண்டுல்கர்.
* முகக்கவசம் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை:
முகக்கவசம் அணிந்து வராவிட்டால் ஏப்ரல் 10ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விநியோகம் கிடையாது- தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.
நாட்டில் மீண்டும் சவாலான சூழ்நிலை உருவாகி உள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாததால்தான் இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் மோடி பேச்சு.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும்- பிரதமர் மோடி.
மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது.
கொரோனா சூழலை சமாளிக்க பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பு குறித்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
No comments:
Post a Comment