அக்னிப்புரட்சி இன்றைய (12.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.

* நாடு முழுவதும் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 904 பேர் கொரோனாவுக்கு பலி.

நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதித்த 92 ஆயிரத்து 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

* உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நேரிடையாக முறையிடும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

காணொலி வாயிலாக முறையிட ஏற்பாடு - உச்சநீதிமன்ற பதிவாளர்.

உச்சநீதிமன்ற ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு என தகவல்.

* கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,188 புள்ளிகள் சரிந்து 48.402 புள்ளிகளில் வர்த்தகம்.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 353 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14 ஆயிரத்து 481 புள்ளிகளில் வணிகமாகிறது.

* தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியீடு:

தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய்.

அரசின் அறிவிப்பு மூலம் 6,810 கலைஞர்கள் பயன் பெறுவார்கள்.

* தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்.

* திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உடல்நிலை சீராக உள்ளது - சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிக்கை.

கொரோனா பாதிப்பு காரணமாக, துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதி.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - முதல்வர் பழனிசாமி ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது - அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு.

* போஸ்ட்மேன் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, கடலூர் தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது - மாற்று ஏற்பாடுகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி.

* உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்-சிசிடிவி காட்சிகள் வைரல்:

கோவை உணவகத்தில் மக்களை தாக்கிய எஸ்.ஐ முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்.

பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு.

* ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு
பரிந்துரை.

மத்திய அரசு அனுமதி அளித்தால், நாட்டின் 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் இருக்கும்.

ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது.

ரெட்டிஸ் லேப் நிறுவனம், தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.

கோரிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

* அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவு.

அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஞ்சினி பார்த்தசாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்த கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் சூரப்பாவுடைய பதவிக்காலம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை இந்த மூவர் குழு கண்காணிப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,711பேருக்கு கொரோனா உறுதி.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

சென்னையில் இன்று ஒரு நாள் மட்டும் 2,105 பேருக்கு கொரோனா.

* தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு?

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் நடத்த கல்வித்துறை முடிவு என தகவல்.

12ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கலாமா என முதலமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

* பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி மாற்றம்:

மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் மாற்றம்.

மொழிப்பாட தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகள் நடக்கும் - தேர்வுத்துறை இயக்குனர்.

* தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்.

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவி ஓய்வு பெற்றதை அடுத்து சுஷில் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்.

* மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, 24 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை
- தேர்தல் ஆணையம் உத்தரவு.

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் மீது நடவடிக்கை.

இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள தடை - தேர்தல் ஆணையம்.

* அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வரும் 14ம் தேதி ஆலோசனை.

அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வரும் 14ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.

* வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு.

அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்க உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages