அக்னிப்புரட்சி இன்றைய (14.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.
* ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த புரட்சியாளர்: சமூகநீதியை உயர்த்தி பிடித்து நீதி வழங்கிய பி.ஆர்.அம்பேத்கர்: இன்று டாக்டர் அம்பேத்கரின் 130வது பிறந்தநாள்.
* இன்று தமிழ் புத்தாண்டு - தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு.
கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு.
அதிகாலை முதலே முக்கிய கோயில்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.
* இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்:
நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர்.
பிறை தென்பட்டதையடுத்து சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
* வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தி.மலை, சேலம், தர்மபுரி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
* தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கொரோனா தொற்றை எதிர்கொள்ள போர்கால அடிப்படையில் தயாராகிக் கொண்டிருக்கிறோம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
* 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு ரத்து
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து; 12ம் வகுப்பு தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைப்பு - கொரோன பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவு
* சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்து வீடு திரும்பினார்.
* பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது- ளணவேல்முருகன்.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குள் கணினி நிபுணர்கள் வந்து செல்ல திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பாடம் நடத்த 3 கணினி நிபுணர்கள் அனுமதித்து உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது.
கணினி நிபுணர்கள் அனுமதித்தது பற்றி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் அளித்துளேன்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகாரை அனுப்பியுள்ளேன்- வேல்முருகன்.
* தமிழகத்தில் 8,000-ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது.
No comments:
Post a Comment