அக்னிப்புரட்சி இன்றைய (13.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.
* காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்:
கோவையில் உணவகத்தில் ஊழியர்களையும், உணவருந்திக் கொண்டிருந்தவர்களையும் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம்.
* பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு:
செந்தில் மனைவி, மகன், மருமகள் அனைவருக்கும் கொரோனா தொற்று.
செந்தில் குடும்பத்தினர் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
அண்மையில் தேர்தல் பிரசாரம் செய்த நிலையில், செந்திலுக்கு தொற்று பாதிப்பு.
* வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்.
தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்.
தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு முடிவு.
* கேரள மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஜலீல் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என லோக் ஆயுக்தா ஏற்கெனவே கூறியிருந்தது.
* மங்களகரமான நாட்களில் பதிவுசெய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம்.
பதிவுத்துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம்.
சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்துவைக்க உத்தரவு.
* சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன்.
தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க - மு.க. ஸ்டாலின்.
* கோயில்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு:
கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி- இந்து சமய அறநிலையத்துறை.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நடைபெற வேண்டும்.
கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதி.
கோவில் மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை– இந்து சமய அறநிலையத்துறை.
* அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாமக விற்கு தொடர்பு இல்லை.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தலைமையிலான விசாரணை குழு தகவல்.
* ஒரே நாளில் ரூ.42 ஆயிரம் வசூல் - சிஎம்டிஏ!
கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் இயங்குவதற்கு மாறுபாடாக கடைகளை திறந்த வியாபாரிகள் மற்றும் மாஸ்க், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் இன்று ஒரே நாளில் அபராதத் தொகையாக ரூ.42 ஆயிரம் வசூலானது என சிஎம்டிஏ முதன்மை நிர்வாக அதிகாரி S.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "கோயம்பேடு வணிக வளாகத்தில் கண்காணிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
* மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு முடிந்தவுடன் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.
வரும் 15 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
24ஆம் தேதி திருகல்யாணம் முடிந்தவுடன் காலை 9.30 மணிக்கு மேல் 2.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி - கோவில் நிர்வாகம்.
💥வேளச்சேரியில் வாக்குச்சாவடி எண் 92ல் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆணை
ஏப்ரல் 17ஆம் தேதி மறு வாக்குப்பதிவு!
* பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை பெருவிழா நடைபெற உள்ளது
இந்து சமய அறநிலைத்துறையை கலைக்க வேண்டும் என்ற சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்திற்கு சைவ தமிழ் ஆன்மிகர்கள் எதிர்ப்பு
* பள்ளிகள் திறக்கப்படும் வரை தனியார் பள்ளி ஆசிரியர், ஊழியர்களுக்கு மாதம் ₹2,000, 25 கிலோ அரிசி வழங்கப்படும்
- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு
* கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு முடக்கம் அமல்;
15 நாட்களுக்கு அனைத்து அலுவலகங்களும் மூடப்படும்; அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு. - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.
ரயில், பேருந்து சேவை தொடரும்; அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்; உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி.
மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; மக்கள் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளலாம்.
- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.
* வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு.
வரும் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்டதால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
* ஊரடங்கு நடைமுறை தான் கொரோனா வெருவித் தொற்றை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகளை குறைக்கவும் உதவியது; தடுப்பு மருந்துகள் அல்ல !- இங்கிலாந்து நாட்டின் முதன்மை அமைச்சர் போரீஸ் ஜான்சன் கருத்து
* குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது
* கோயில்களில் திருமணம் - 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது
கோயில் மண்டபங்களில் திருமணம் - 50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது
: கொரோனா வெருவித் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
No comments:
Post a Comment