அக்னிப்புரட்சி இன்றைய (18.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.
* சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.
இரவு நேர ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.
புதிய உச்சமாக நாடு முழுவதும் ஒரே நாளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா.
தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.
* பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.
வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது.
15 நாட்களுக்கு முன்னர் தேர்வு தேதி
அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
* கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதிகாரிகளுடன் ஆய்வு.
தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல் காந்தி.
கொரோனா சூழலில் தேர்தல் பிரச்சார கூட்டங்களால் ஏற்படும் விளைவுகளை இதர அரசியல் தலைவர்களும் உணர வேண்டும் என ராகுல் கோரிக்கை.
* தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
தமிழகத்திற்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.
மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் - ஸ்டாலின்.
* வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து.
வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு. பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்.
* நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர் சந்திப்பு:
நடிகர் விவேக்கிற்கு அரசு மரியாதை வழங்கிய மத்திய அரசு, மாநில அரசு மற்றும் காவல்துறையினருக்கு நன்றி.
இறுதி வரை அவருடன் பயணித்து அவரை கவுரவித்த ஊடகத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி.
* கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
தடுப்பூசி மையங்களுக்கு சென்று ஊசி போடுவதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது.
* தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 10,723 பேருக்கு கொரோனா.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,91,451 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 42 பேர் உயிரிழப்பு.
* வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை - சத்யபிரதா சாகு அறிவிப்பு.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.
மே 2ஆம் தேதி தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment