ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு. வரும் 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு.
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்...
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள்.
இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு
ஊரடங்கு அறிவிப்பு.
பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.
12ஆம் வகுப்பு பொதுத்
தேர்வு ஒத்திவைப்பு.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு
12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்.
இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து.
பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- செய்முறைத் தேர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும்.
கல்லூரி, பல்கலை., தேர்வுகள் இணையவழி மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை.
அவசர மருத்துவ தேவை, விமானம், ரயில் நிலையங்களுக்கு செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி.
அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி.
பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கும் அனுமதி.
பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.
தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி.
அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை.
முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்கள் காலை 6 -10, நண்பகல் 12- 3, மாலை 6 - 9 மணி வரை செயல்பட அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்சல் மட்டும் வழங்கப்படும்.
வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை கீழ்க்கண்ட உத்தரவுகள் அமலில் இருக்கும்:
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது.
மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேலைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.
வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில்
தடை
இரவு நேர ஊரடங்கின் போது பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைக்கு அனுமதி இல்லை
அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி
- தமிழக அரசு
ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகள் கிடையாது:
ஞாயிறு முழு ஊரடங்கில் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்காது - தமிழக அரசு.
No comments:
Post a Comment