அக்னிப்புரட்சி இன்றைய (26.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.

* 2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

சிறந்த துணை நடிகர் - டேனியல் கலுயா (யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா திரைப்படத்திற்காக)

சிறந்த இயக்குநர் - க்ளோயி சாவ் (நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக)

சிறந்த திரைக்கதை - பிராமிசிங் யங் உமன்

சிறந்த தழுவல் திரைக்கதை - ஃபாதர்

சிறந்த ஆடை வடிவமைப்பு - ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

முழுநீள அனிமேஷன் படம் - சோல்

சிறந்த ஒலி அமைப்பு - சவுண்ட் ஆஃப் மெட்டல்.

சிறந்த பன்னாட்டு திரைப்படமாக டென்மார்க்கை சேர்ந்த Another Round படம் விருதை வென்றுள்ளது

சிறந்த துணை நடிகர் (ஆண்) - டேனியல் களுயா Judas and the black Messiah படத்துக்காக

Soul திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை விருது வழங்கல்

சிறந்த துணை நடிகர் (பெண்) விருதை யுக் ஜங் எவுன் பெறுகிறார்

படத்தொகுப்பு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் Mank திரைப்படம் விருதுகளை வென்றது

சிறந்த நடிகர்(ஆண்) அந்தோணி ஹாப்கின்ஸ் தேர்வு!

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகர் இர்பான் கானுக்கு நினைவேந்தல்

* முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைவு:

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து ரூ.3.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தொடர்ந்து முட்டை விலை குறைந்து வருகிறது.

* தமிழகத்தில் முழு ஊரடங்கு: பொதுமக்களின் கைகளில்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு  இப்போது மக்கள் தரும் ஒத்துழைப்பை பொறுத்தே, முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்த முடிவை சொல்ல முடியும்... சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

* ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்பு

“ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும்
அனுமதி கூடாது"

முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சிகள் கூட்டத்தில் திமுக கருத்து

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதா? - முத்தரசன்

ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து
நடத்த வேண்டும் ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையில் அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை- முத்தரசன்

* வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும்-சென்னை உயர் நீதிமன்றம்.

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் - தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

* வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் - சத்யபிரதா சாகு.

* ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை தொழில் சார்ந்த ஆக்சிஜன் ஆகும்.

இதை மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியாது - தமிழக அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல்.

வேதாந்தா நிறுவனத்திடம் வாயுவாக உள்ள ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் உட்கட்டமைப்பு இல்லை.

அந்த கட்டமைப்புகளை உருவாக்க 9 மாத காலம் ஆகும் - தமிழக அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல்.

💥தமிழில் வெளியானது புதிய கல்வி கொள்கை!

பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கை தமிழில் வெளியிடப்பட்டது.

💥கர்நாடக மாநிலத்தில் நாளை தொடங்கி 14 நாட்கள் முழு ஊரடங்கு. மிகவும் சொற்ப தளர்வுகளே வழங்கப்பட்டுள்ளன

* ஆக்சிஜன் ஏற்றி செல்லும் சரக்குந்துகள்  இருந்தால் தில்லி அரசாங்கத்திற்கு தயவுசெய்து உதவுங்கள் : தில்லி அரசு தமிழ் நாளிதழ்களில் விளம்பரம்

இந்தியாவில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு ஆணவம், தீவிர தேசியவாதம் மற்றும் ஆட்சி திறனின்மை காரணிகள் என கடும் சொற்களால் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதியை விமர்சித்து "The Australian" நாளேடு கட்டுரை

* கூவத்தூர் அருகே தனியார் - அரசு பேருந்து மோதல்.

விபத்தில் 4 பேர் பலி - 2 பேர் கவலைக்கிடம், 15 பேர் காயம்.

காத்தான்கடை என்ற இடத்தில் விபத்து, காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி.

* கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

மே 1 முதல் 18 - 45 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்கனவே மத்திய அரசு உத்தரவு.

சில உற்பத்தியாளர்கள் தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளனர்.

* “வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் ஊரடங்கு அறிவிக்கலாம்"-சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

ஏப்ரல் 28-ல் இது குறித்த அறிவிப்பை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்

கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், எந்த சமரசமும் செய்ய கூடாது - உயர்நீதிமன்றம்

"வாக்கு எண்ணிக்கை அன்று, வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம்"

மருந்து தடுப்பூசிகளை கூடுதலாக சப்ளை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் -  நீதிமன்றம்.

சனிக்கிழமையும் மீன், இறைச்சி கடைகளை மூட உத்தரவு-தமிழக அரசு உத்தரவு.

சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை.
ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஸ்டெர்லைட் ஆலை 1000  டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்டது என வேதாந்தா நிறுவனம் உறுதி

* மொத்த தடுப்பூசி கொள்முதலையும் நடுவண் அரசு மேற்கொண்டு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க முதன்மை அமைச்சர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்.

நியாயமற்ற முறையில் விதிக்கட்டுள்ள தடுப்பூசியின் விலை மாநிலங்களுக்கு மேலும் பணச்சுமையை அதிகரிக்கும் என தனியார் நிறுவனங்களின் மாறுபட்ட தடுப்பூசி விலை குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு

💥பொதுமக்கள் தங்கள் வீட்டிலும் முக மறைப்பு (Mask) அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது!
: நடுவண் அரசு

💥இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க மாநில அரசு 144 தடை ஆணை விதிக்கலாம்!

:மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை
இந்தியாவின் மோசமான நிலைமை குறித்து நாங்கள் கவலையுறுகிறோம்

இந்தியா அதன் குறிப்பிட்ட தேவைகளைச் சொன்னால் நாங்கள் உதவ ஆயத்தமாக  இருக்கிறோம்
- சீன வெளியுறவுத் துறை அறிவிப்பு

* மே 1 முதல் 50 % பணியாளர்களுடன் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டுமென உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு

💥தமிழகத்தில் இன்று புதிதாக 15,684 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி; 94 பேர் உயிரிழப்பு

💥இணையாளர் (எழுத்தர் பணி நிலை) பதவிக்கு ஆட்சேர்ப்பு : SBI அறிவிக்கை வெளியீடு!

சென்னை வட்டத்தில் மட்டும் 475 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2021

* தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய கட்டுரை என பிரதமர் நரேந்திர மோதியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்து இன்று கட்டுரை வெளியிட்ட "The Australian" நாளேட்டுக்கு இந்திய உயர் ஆணையம் கடிதம்

* புதுச்சேரியில் 30 ஆம் தேதி இரவு வரை அனைத்து மதுக்கடைகளும் மூட உத்தரவு.

கொரோனா நோய் தொற்று காரணமாக புதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து மதுபான கடைகள், சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் மூட வேண்டும்.

கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவு.

* பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சூழல் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசியதாக தகவல்.

வாக்சின்களுக்கான மூலப் பொருட்கள் சப்ளை தொடர்பாக பிடனுடன் விவாதித்தேன்.

வாக்சின் மூலப் பொருட்கள் சப்ளை சுமூகமாக நடைபெற வேண்டியது அவசியம் - பிரதமர் மோடி.

உலகளாவிய கொரோனா சவாலை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வெல்ல முடியும்.

அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது - பிரதமர் மோடி

இரு நாடுகளின் கொரோனா நிலவரம் குறித்து விரிவாக பேசினோம்.
இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிக்கு நான் நன்றி தெரிவித்தேன்- பிரதமர் மோடி.

* இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வெருவித் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 1,59,272
இதுவரையில் மொத்தம்: 54,21,645

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages