அனைத்து கட்சி கூட்டம்: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பாமக எதிர்ப்பு!"
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக இன்று நடைபெற்றை அனைத்து கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என பாமக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாமக சார்பில் பங்கேற்ற இராதாகிருஷ்ணன், கணேஷ்குமார் அகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
(குறிப்பு: தினமும் 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வோம் என்று ஸ்டெர்லைட் கூறுவதே ஒரு கட்டுக்கதை ஆகும். அந்த அளவு ஆக்சிஜன் அங்கு தயாரிக்க வாய்ப்பு இல்லை)
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க நிலைப்பாடு!"
இந்தியா முழுவதும் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு உதவும் நோக்குடன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையை இயக்க அனுமதி அளித்தால், தினமும் 1050 டன் ஆக்சிஜனை இலவசமாக தயாரித்து வழங்கத் தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறப்பதற்கு கொல்லைப்புறம் வழியாக மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும். ஸ்டெர்லைட் ஆலையின் இந்த சதி வலையில் தமிழ்நாடு விழுந்து விடக்கூடாது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு இருந்திருந்தால், ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் யோசனையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், உச்சநீதிமன்ற யோசனையை ஏற்க மறுத்து விட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ‘‘தூத்துக்குடி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடியாது; நாங்களே தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்குவோம்; தமிழக அரசிடம் ஆக்சிஜன் ஆலையை இயக்குவதற்கு திறமையும், தகுதியும் உள்ள பொறியாளர்கள் இல்லை... இத்தகைய சூழலில் தமிழக அரசே ஆலையை இயக்கினால் ஆபத்து ஏற்படும்‘‘ என்று கூறியுள்ளது.
இதிலிருந்தே ஸ்டெர்லைட் ஆலையின் உள்நோக்கம் என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியும். எனவே, ஆக்சிஜன் தயாரித்து தருவதற்காக தூத்துக்குடி ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment