அக்னிப்புரட்சி இன்றைய (28.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.

* கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.

ஹர்ஷ்வர்தன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி போடும் பணி குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

* அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவு.

* ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது.

ஆன்லைன் வகுப்புகளை வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் நடத்த வேண்டும் - கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை.

* 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்  CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

* அமெரிக்காவுக்கு இந்தியா அளித்த உதவியை மறக்கவில்லை.

ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து பொருட்களை அனுப்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி.

* இந்தியாவில் புதிதாக 3,60,960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயர்ந்தது.

புதிதாக 3,293 பேர் உயிரிழந்துள்ளனர்; இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29,78,709  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 82.33% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.12% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 16.55% ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், நாட்டின் இதுவரை 14,78,27,367 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சென்னைக்கு சிறப்பு அதிகாரி-சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது நியமனம்.

சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

* சென்னையில் தனியாரும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

சென்னையில் தனியார் ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

💥18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா வெருவித் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான பதிவு https://www.cowin.gov.in/home தளத்தில் இன்று மாலை 4 மணி முதல் துவங்குகிறது.

மறக்காமல் பதிவு செய்யுங்கள். தடுப்பூசி ஒன்றே நம்மை காப்பாற்றும்

* வைத்தீஸ்வரன் கோயில் குடமுடக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்கபதை தடுக்க 144 தடை உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுடக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்கபதை தடுக்க 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

* சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிமெண்ட் விலையேற்றம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிளாஸ் ஒன் ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

* தில்லி அரசு என்றால் இனி துணைநிலை ஆளுநர்!

தேசியத் தலைநகர் தில்லி அரசு திருத்தச் சட்டம் 2021 அரசிதழில் வெளியீடு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை விட அதிகாரம் மிக்கவராக மாறினார் தில்லியின் துணைநிலை ஆளுநர்.

* கொரோனா வெருவித் தடுப்பு பணியில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

முதற்கட்டமாக 1.50 கோடி கொரோனா வெருவித் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யவிருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

* ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி.

ஜூலை 31-க்கு பிறகு  நிலைமையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம்.

* வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு.

“வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருவது அவசியம்"

“வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது"-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* மே 1ம் தேதி முதல் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு.

* ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன்:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் - கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை என தகவல்.

* 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியது.

cowin.gov.in மற்றும் ஆரோக்யசேது செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.

* மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ 100 குறைப்பு- சீரம் நிறுவனம்.

தடுப்பூசி விலையை குறைக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்த நிலையில் சீரம் நிறுவனம் விலை குறைப்பு.

மாநில அரசுகளுக்கான தடுப்பூசி ரூ 400-லிருந்து ரூ 300 க்கு விற்பனை.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது என சீரம் அறிவிப்பு.

விலையை குறைக்குமாறு மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் விலை குறைப்பு.

* ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இடமாற்றம்:

ரெம்டெசிவிர் மருந்து நாளை முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்கப்பட்டு வந்த நிலையில் இடமாற்றம்.

* தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா உறுதி; 98 பேர் உயிரிழப்பு.

💥அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வீட்டிலிருந்தே பணி (Work From Home!)

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.

மே இறுதி வாரத்தில் வருகை புரிந்தால் போதுமானது.

மாணவர்களுக்கு வீடுகளில் இருந்தே வழிகாட்டுதல் வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணை.

* தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு மற்றும் மருத்துவமனை படுக்கைகள் இருப்பினை கண்காணிக்க தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

* புதுச்சேரியில் 84 முகவர்களுக்கு கொரோனா உறுதி.

புதுச்சேரியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லவிருந்த முகவர்கள் 84 பேருக்கு கொரோனா .

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages