அக்னிப்புரட்சி இன்றைய (29.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.
* மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: 8-ம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 8வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு - 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப்பதிவு தொடங்கியது.
* வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவினை வீட்டில் இருந்தவாறே கண்டு களித்து ஸ்ரீ தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி பரிபூரண அருளை பெற வேண்டுகிறோம்.
நேரம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை...
Dharmapuram Adheenam:
https://youtube.com/channel/UCuaWaO89E8H4_6RPKlceuYw
Thiruvaiyaru Channel:
https://youtube.com/c/Thiruvaiyaru
Jaya TV:
https://youtube.com/c/JayaPlusNews
DD Podhigai:
https://youtube.com/c/DoordarshanPodhigai
* கொரோனா பரவல்
மருத்துவ நிபுணர் குழுவுடனும் ஆலோசனை நடத்துகிறார், தலைமை செயலாளர் ஆலோசனை
ஊரடங்கு நீட்டிப்பு? கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.
காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.
காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னையில் சுனாமி போன்று கொரோனா பரவி வருகிறது - தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக்.
சென்னையில் 25 ஆயிரம் பேருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது - சிறப்பு அதிகாரி சித்திக்.
விருந்தினர்களையும், கூட்டமாக கூடுவதையும் தவிருங்கள்.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆக்சன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான பணிகளை விரைவுப்படுத்தியுள்ளோம்- சிறப்பு அதிகாரி சித்திக் ஐ.ஏ.எஸ்.
* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக:
3,79,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,69,507 பேர் குணமடைந்துள்ளனர்.
3645 பேர் உயிரிழந்துள்ளனர்.
* விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன - தமிழக மாவட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தகவல்.
* டெல்லியில் 4 km தூர பயன்பாட்டுக்கு ₹10,000 பெறும் மருத்துவ ஆம்புலன்ஸ் (Ambulance) நிறுவனங்கள். ஆம்புலன்சின் தேவை அதிகரித்து இருப்பதால் கொள்ளை விலையில் சேவை!
* சென்னையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவு.
கொரோனாவால் உயிரிழந்தால் அவர்கள் உடலை அடக்கம் செய்ய பணம் கேட்டு ஊழியர்கள் கட்டாயப் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
* பதற்பால் ஈர்ப்பு உறவுகள் குறித்த வழக்கில் தீர்ப்பளிக்க உளவியலாளரின் உதவியை நாடும் நீதியரசர்!
* கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் தில்லி உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஐந்தாரை விடுதி ஒன்றில் சிறப்பு படுக்கை வசதிகள் எற்பாடு செய்யவிருந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக தில்லி அரசு தகவல்
* தமிழ்தேசியம் என்ற பெயரில் திராவிட எதிர்ப்பை கையில் எடுத்தால் அது பார்ப்பனிய ஆதரவில் போய் முடியும்.
- திருமாவளவன், விசிக தலைவர்
* தமிழகத்தில் தடுப்பூசி வீணாகும் விழுக்காடு 12 லிருந்து 8 ஆக குறைப்பு
* மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை-தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.
மே 1-ம் தேதி மே தின விடுமுறை என்பதால் ஊரடங்கு அவசியமில்லை.
மே 1-ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக அரசே முடிவு செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி.
* தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று என்பதால் கூடுதல் அதிகாரிகள் நியமனம்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் இருப்பார்கள்.
* காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
16 ஆயிரத்து 387 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவார்கள்
* தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு:
மே 2 வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழுஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. - தமிழக அரசு.
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி.
- தமிழக அரசு.
ஞாயிறு முழு ஊரடங்கு அன்று உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி, பகல் 12 முதல் 3 மணி, மாலை 6 முதல் இரவு 9 மணி வரை மட்டும் பார்சலுக்கு அனுமதி.
இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படும் - தமிழக அரசு.
* குமரி மாவட்டம் சுசீந்திரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் நிலநடுக்கம். வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.
நிலநடுக்கம் கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டதால் பரபரப்பு.
* உங்கள் KYC ஐப் புதுப்பிக்க ஏதாவது எண்ணை அழைக்கும்படியோ அல்லது இலவச மொபைல் டேட்டா தருவதாக வரும் மோசடி செய்திகளில் ஜாக்கிரதையாக இருக்கவும். இந்த செய்திகளில் கொடுக்கப்பட்ட எந்த எண்ணையும் அழைக்க வேண்டாம் அல்லது லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத / சந்தேகத்திற்கிடமான எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள்.
- டீம் ஜியோ
* கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி, லீபுரம், அழகப்பபுரம், ஒற்றையால்விளை, போன்ற பல்வேறு பகுதிகளில் திடீர் நிலநடுக்கம். வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம். ஒற்றையால் விளை பகுதியில் பாலத்தில் இருந்த சிலர் கீழே விழுந்ததால் பரபரப்பு. மக்கள் தெருக்களில் தஞ்சம். ஐந்து செகண்ட் மட்டுமே நில நடுக்கம் உணரபட்டதாக தகவல்.
* அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர் இவர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் அரங்கநாயகம்.
* ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு.
ஒரு பாதுகாவலர் மற்றும் வங்கி அதிகாரி படுகாயம்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி ஓட்டம்.
* கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது-மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.
கொரோனாவை தடுக்க நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கொரோனா பேரிடரின் போது, அவ்வப்போதைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்க கூடாது -நீதிபதி.
*பாரத் பயோடெக் மாநிலங்களுக்கான தடுப்பூசி கொள்முதல் விலையை ₹200 குறைத்து ₹400 க்கு வழங்க உள்ளதாக அறிவிப்பு!
💥தமிழகத்தில் இன்று மேலும் 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.107 பேர் உயிரிழப்பு.
No comments:
Post a Comment