அக்னிப்புரட்சி இன்றைய (30.04.2021) முக்கிய செய்திகள்.
💥தென் மாநிலங்கள்: இன்றைய கொரோனா வெருவித் தொற்று நிலவரம்:
கேரளா - 38,607
கர்நாடகா - 35,024
தமிழ் நாடு - 17,897
ஆந்திரா - 14,792
தெலங்கானா - 7,994
* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.
* இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானா்.
பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 54.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது.
பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார்.
கணா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த கே.வி.ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
* இந்தியாவில் ஒரே நாளில் 3,86,829 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 3,501 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் 31,77,250 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 1,87,54,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி.
அற்ப காரணங்களுடன் இனி இது போன்று வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தல்.
* தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே.
தமிழக அரசு கொடுத்துள்ள 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆர்டர் எப்போது வந்து சேரும் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு
தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி, துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலை உறுப்பினர், 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
* தமிழக அரசு கேட்ட கொரோனா தடுப்பூசிகள், மருந்துகளை எத்தனை நாட்களில் வழங்குவீர்கள்?உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக அரசு கேட்ட 1.50 கோடி தடுப்பூசிகள் இன்னும் வந்து சேராத நிலையில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.
* வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.
வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம்.
இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம்.
நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது. திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்.
* 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் - சென்னையில் நாளை செயல்படுத்த முடியாது.
தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
* சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கு:
6 வாரங்களில் விசாரணையை முடிக்க
சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
6 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.
தாமாக முன் வந்து வழக்காக விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.
* தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவிப்பு.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என ஏற்கனவே அறிவிப்பு.
* கண்மணிகளே வெற்றிமாலை சூடத் தயாராகுங்கள்- அதிமுக.
கடமைகள் அழைக்கின்றன; வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள்.
அதிமுக தொண்டர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்- ஓ.பி.எஸ்.-ஏ.பி.எஸ். அறிக்கை.
* ஹஜ் புனித பயணம் செல்ல கொரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டிருக்க வேண்டியது அவசியம்.
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தோருக்கு ஜூனில் 2-வது தவணை தடுப்பூசி போடப்படும்
- தமிழக அரசு.
💥கொரோனா வெருவி பாதிப்பு காரணமாக பீகார் மாநில தலைமை செயலர் அருண் குமார் சிங் உயிரிழப்பு!
வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வினர் தில்லுமுல்லுகளில் ஈடுபடுகிறார்களா என்பதை அதிமுக தொண்டர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.
* கொரோனா மருத்துவ உதவிகளுக்காக @104_GoTN என்ற சிறப்பு Twitter Handle ஒன்றை உருவாக்கி உள்ளது தமிழக அரசு.
* படிக்காத மக்கள் எப்படி COWIN இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி பெறுவார்கள்?
அனைத்து தடுப்பூசிகளையும் நடுவண் அரசே வாங்கி தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஏன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது? - உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் கேள்வி
* ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை என சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது
:அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஆணை
* தமிழகத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளின் விவரத்தை தெரிந்து கொள்ள புதிய இணையதளம் அறிமுகம்!
https://tncovidbeds.tnega.org/
* ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில் ஆலை செயல்பாட்டை மேற்பார்வையிட கண்காணிப்புக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
* தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழ்நாட்டில் இன்று 18,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழப்பு.
💥தனியார் மருத்துவமனைகள் 50 % படுக்கையை கொரோனா மருத்துவத்துக்கு பயன்படுத்த ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை.
No comments:
Post a Comment