தேர்தல் ஆணையம் கட்சிகளை பற்றி அதன் அதிகாரத்தை பற்றி எடுக்கும் முடிவுகள் அதற்கு நீதிமன்றம் தரும் உத்தரவுகள் அனைத்தும் பெரும்பாலும் நாட்டுக்கு நலன் தருவது அல்ல. உதாரணமாக சிறிய கட்சிகளாக எந்தவிதமான சட்டம் வகுக்கும் ஆதாரங்கள் இன்றி நினைப்பவர்கள் எல்லாம் ஒரு பெயர் வைத்து தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக் கின்றனர்.
விண்ணப்பங்கள் வர பெற்றதை பதிவு செய்கின்றனர். பதிவு செய்யப்பட்ட இந்த கட்சிகளுக்கு முறையான பைலாஸ் தருவதில்லை. வரைமுறையின்றி சட்ட விதிகளுக்கு புறம்பாக பதிவு பெற்ற கட்சிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கு தரும் சலுகைகள் போன்று தனி சின்னம் ஒதுக்குவது அப்படி பட்ட பதிவு கட்சிகளில் குறிப்பிட்டுள்ள செயலாளர் அல்லது தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் இவர்கள் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் நிறுத்துவதும் அவர்களுக்கு தேர்தலில் நிற்க அங்கீகாரக் கடிதம் தேர்தல் ஆணையரிடம் தருவதும் சட்டத்திற்கு புறம்பானது.
காரணம் கட்சி பதவியை குறிப்பிட்டு அங்கீகாரக்கடிதம் தரும் கட்சி நிர்வாகிக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிக்கு இருப்பது போன்ற எந்த ஒரு சட்டப்படியான தகுதியும் அதிகாரமும் இல்லாதவர்
இப்படிப்பட்ட நபர் நூறு இருநூறு தொகுதிகளுக்கு ஆட்களை நிறுத்தி பதிவு பெற்ற ஒரே காரணத்திற்காக அங்கீகாரம் கடிதம் கொடுப்பதும் அதை தேர்தல் அதிகாரி ஏற்று கொள்வதும் பெருத்த மோசடியாகும். மேலும் தேர்தல் ஆணையம் பொதுவான சின்னம் ஒதுக்குவதும் இந்த மாதிரி தனித்துவம் பெற்ற பதிவு கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டணி சேர்ப்பதும் தனித்தனி பைலாஸ் படி உருவான தனித்தனி காட்சிகளாக இருந்து கொண்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது அதனுடைய சின்னத்தை இன்னொரு பதிவு கட்சிக்கு தருவதும் அதை அந்த கட்சி ஏற்றுக்கொள்வதும் இரண்டு கட்சிகளின் பைலாஸ்படி தனித்தனியாக பரிசீலித்தால் மக்களை ஏமாற்றும் மோசடியாக தெரியும். இந்தமாதிரியான மோசடிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் தொழிலை நீதித்துறை செய்வது வருத்தப்படக்கூடிய செயலாகும்.
இந்த மோசடி விவரத்தை எதிர்த்து எந்த அங்கீகாரம் பெற்ற கட்சியும் தேர்தல் அதிகாரியிடம் கூறாதது வேடிக்கையிலும் வேடிக்கை. அப்படி எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் கமல்ஹாசன் கட்சி,நாம் தமிழர் கட்சி, தேமுதிக கட்சி,டிடிவி தினகரன் கட்சி எல்லா தொகுதிகளிலும் பரிந்துரைக்க முடியாது. சுயேட்சை யாகத்தான் நிற்க முடியும். இப்படிப்பட்ட மோசடியான சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் தந்திருப்பது நீதிமன்றம் பரிந்துரைப்பது சட்டத்திற்கு புறம்பானதும் மோசடியானதும் ஆகும். இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட சிஸ்டம் நம்நாட்டு நலனை மேற்கண்ட வழிகளில் தீர்மானிப்பது கொடுமையிலும் கொடுமை.
No comments:
Post a Comment