அக்னிப்புரட்சி இன்றைய (08.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.15 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.65 க்கும் விற்பனை.
* தமிழகத்தில் கொரோனா மருத்துவ படுக்கைகள் - இருப்பு குறித்து தெரிந்து கொள்ள இணையதளம் அறிமுகம்.
தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இட மாற்றம்:
சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம் - தமிழக அரசு.
தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்.
தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக தாமரைக்கண்ணன் நியமனம் - தமிழக அரசு.
* கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மே 15 வரை இரண்டாம் டோஸ் மட்டுமே வழங்கப்படும் எனவும் அது வரையில் புதியோருக்கு தடுப்பூசி போடப்படாது என தெலங்கானா அரசு அறிவிப்பு
* தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி - தமிழக அரசு
அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு.
முழு ஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.
மே 2-க்குப் பிறகு இன்னோர் ஊரடங்கைத் தாங்கும் நிலையில் மக்களும் - வாழ்வாதாரமும் இல்லை.
எனவே, காபந்து சர்க்கார் காலத்திலும் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் கையிருப்பு, தயார் நிலையில் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு COVID19 பரவலைத் தடுத்திட வேண்டும்.
- ஏப்ரல் 24 ஆம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
* முழு ஊரடங்கின் போதும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் : முதலமைச்சர் அறிவிப்பு
* தமிழகத்தில் பல்வேறு இடங்களில் TASMAC மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
பல இடங்களில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. குவியலாக மது வகைகளை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி விட்ட மதுப் பிரியர்கள்!
*;கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை அறிய இணையதளம்.
tncovidbeds.tnega.org இணைய தளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள காலிப் படுக்கைகளின் விவரங்களை அறியலாம்.
* இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை - தமிழக அரசு அறிவிப்பு.
10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அறிவிப்பு.
பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு.
தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும்
சலூன் கடைகள் இயங்கலாம் - தமிழக அரசு விளக்கம்.
* கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு பின் தகவல்.
* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக,வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை.
அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசன.
* இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தகவல்.
* கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை ரொக்கமாக பெற ஏற்கனவே வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அது அதிகரிப்பு.
சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கமாக பெறலாம் என வருமான வரித்துறை அறிவிப்பு.
* பொருள்கள் வாங்க முண்டியடிக்க வேண்டாம்.....
காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பால், மருந்து அனைத்து நாள்களிலும் கிடைக்கும்........
மக்கள் தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம்.......
* 10ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்:
ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம்வழங்கப்படுகிறது.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் -உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.
* தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மே 11-ல் தொடங்குகிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.
மே 11-ந் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
மே 12-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் நடைபெறும்.
* தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்.
காலை 11.30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என அறிவிப்பு.
கொரோனா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்.
* கொரோனா மருத்துவத்துக்கு அரசு காப்பீடு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதற்கு எதற்கு புதிய அறிவிப்பு? என அதிமுக கேள்வி
* கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி தற்காலிக அவைத் தலைவராக அறிவிப்பு!
திங்கள் காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார்.
செவ்வாய் (11.05.2021) அன்று அவைத் தலைவராக பிச்சாண்டி அவர்கள் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைக்கிறார்.
* பெண்களை போல திருநங்கைகளுக்கும் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்க அரசு முடிவெடுத்து வருவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
10 -15 நாட்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு தேவை : இந்திய மருத்துவ சங்கம் நடுவண் அரசுக்கு கோரிக்கை
* இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து -அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல்.
DRDO மற்றும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள மருந்திற்கு அனுமதி.
2-deoxy Dglucose என்ற இந்த மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்.
* முழு ஊரடங்கை அடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
அவ்வாறு வசூலித்தால் ரூ.10,000 அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை.
* தமிழகத்தில் இன்று 27,397 பேருக்கு கொரோனா தொற்று - 23,110 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 241 பேர் உயிரிழப்பு.
சென்னையில் இன்று 6846 பேருக்கு தொற்று உறுதி; 72 பேர் உயிரிழப்பு.
* தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது மத்திய அரசு.
தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு நடவடிக்கை.
தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இன்று காலை தொலைபேசி உரையாடலிலும் இதை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
* தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்களுக்காக ₹59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல் நிதி ஒதுக்கீடு.
* தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.
* தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு அதிகாரியாக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்
No comments:
Post a Comment