அக்னிப்புரட்சி இன்றைய (10.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் 93.38 ரூபாய்க்கும், டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* இசையமைப்பாளர் கங்கை அமரன் மனைவியும், இயக்குனர் வெங்கட் பிரபு & நடிகர் ராம்ஜியின் தாயாருமான மணிமேகலை அம்மாள் (64) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு11.30 மணியளவில் உயிர் பிரிந்தது.
* முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற விரும்பும் கொரோனா தொற்றாளர்கள், கொரோனா மருத்துவத்துக்காக அரசு வழங்கியுள்ள வசதிமுறைகள் குறித்த விவரங்களைக் காண:
https://www.cmchistn.com/covidPackage.php
தனியார் மருத்துவமனைகளை அறிந்துகொள்ள:
https://www.cmchistn.com/covid_empanlled_hospital.php
* தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு:
தமிழகத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இன்று (மே 10) முதல், 24ம் தேதி வரை,மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இன்று காலை, 4:00 முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
* தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி.
அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், டாக்டர் மதிவேந்தன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிப்பு.
* நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
* தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
தொலைபேசியில் பேசிய போது முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை.
தமிழ்நாட்டில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நுரையீரல் அதிகம் பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது.
* தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.
2-வது முறையாக இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு என தகவல்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்து பேட்டி ஏதும் கொடுக்காமல் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் வெளியேறியதால் குழப்பம்.
இன்று மாலை அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தகவல்.
* இந்தியாவில் அதிகரித்து வரும் நோய் தொற்றுக்கு உருமாறிய வைரஸ் காரணமல்ல.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் போனதும் முகக் கவசம் அணியாமல் போனதும்தான் காரணம். உலக சுகாதார அமைப்பு...
* அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்- உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
* கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம.பி பதவி ராஜினாமா.
அதிமுக வை சேர்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்,
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இருவரும் எம்.பி.பதவியை ராஜினாமா செய்தனர்.
* கூடுதல் இடங்களில் Remdesvir மருந்து விற்பனைக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
* சென்னையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக 200 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கம்!
* பல்கலை. துணைவேந்தர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை:
பாரதியார், பாரதிதாசன், அன்னை தெரசா, திருவள்ளுவர் பல்கலை. உள்ளிட்ட பல்கலை. துணைவேந்தர்கள் பங்கேற்பு.
ஆன்லைன் வகுப்புகள், அரியர்ஸ் தேர்வுகள் குளறுபடி குறித்து ஆலோசனை.
* தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.
* தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:
சிபிசிஐடி தலைவராக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக(நிர்வாகம்) எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.
உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள், சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன், உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை என பதவியேற்றவுடன் அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட அண்ணா பல்கலை பருவத்தேர்வுகளில் முறைகேடு புகார். தேர்வுகளை மீண்டும் நடத்தப்படும்: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
* அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்-முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை.
தொகுதி பிரச்சினைகளை நேரடியாக என்னிடம் முறையிடலாம்.
கட்சி பிரச்சினைக்காக காவல்துறைக்கு போன் செய்யக் கூடாது. மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
* கிசான் திட்டத்தில் முறைகேடில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
உழவர்சந்தை மீண்டும் புத்துயிர் பெறும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
இயற்கை விவசாயம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் -எம்.ஆர்.கே.பன்னீர்.
* பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்த முடிவு - அமைச்சர் பொன்முடி
பிப்ரவரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம் - அமைச்சர் பொன்முடி
3மணி நேரம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
* பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும் பிப்ரவரியில் நடைபெற்ற நவ., டிச. 2020 பருவத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார்.
💥 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா உறுதி.
இன்று ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு.
இதுவரை உயிரிழந்தவர்கள் 15,880 எண்ணிக்கை ஆக உயர்வு.
* மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு.
வரும் 31ஆம் தேதி வரை மின் கட்டணத்தைச் செலுத்தலாம் - தமிழக அரசு.
முடிந்தவரை ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்துமாறும் வேண்டுகோள்.
* சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் மு.அப்பாவு போட்டியிடுவார் - திமுக தலைமை.
சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கு.பிச்சாண்டி போட்டியிடுவார் - திமுக தலைமை.
நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
* புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு.
நியமன எம்எலஏக்களாக வெங்கடேசன், வி வி ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் ஆகியோர் அறிவிப்பு.
💥தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கொரொனா தொற்று மருத்துவத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
* Mr.India உள்ளிட்ட பல போட்டிகளில் பட்டங்கள், பதக்கங்களை வென்று குவித்த சென்னையை சேர்ந்த உடற்கட்டுநர் செந்தில்குமார் மாரடைப்பால் உயிரிழப்பு.
💥புதுச்சேரியில் வங்கிகள் காலை 10 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரை வெறும் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும் என புதுவை மாநில வங்கியாளர் குழுமம் அறிவிப்பு.
No comments:
Post a Comment