கொரோனா கட்டுக்கடங்காமல் கடும் பாதிப்பை உண்டாக்கிவரும் நெருக்கடி காலத்தில்,ஊரடங்கு நேரத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே. மணி - Agnipuratchi

கொரோனா கட்டுக்கடங்காமல் கடும் பாதிப்பை உண்டாக்கிவரும் நெருக்கடி காலத்தில்,ஊரடங்கு நேரத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே. மணி

Share This

கொரோனா கட்டுக்கடங்காமல் கடும் பாதிப்பை உண்டாக்கிவரும் நெருக்கடி காலத்தில்,ஊரடங்கு நேரத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே. மணி
           
பென்னாகரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனையிலும், தர்மபுரி அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதற்கு அவ்வப்போது பேசி வருகிறேன்.
இதைப்போல தமிழ்நாடு முழுவதும் பரவலாக கொரோனா பாதிப்பு செய்தி வருகின்ற இடங்களுக்கெல்லாம் ஆங்காங்கே அரசு மருத்துவமனைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பேசி இயன்ற அளவுக்கு செய்து வருகின்றோம். ஒவ்வொரு செய்தியும் கேட்கும்போது மிகுந்த வேதனைஅளிக்கிறது.ஒரு சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என்பதும் சற்று நேரத்தில் இரண்டொருவர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது.
         
இந்தக் கொரோனா பாதிப்பு செய்தி காலையிலிருந்து இரவு 12 மணி,1 மணி வரையில் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உதவிகள் குறித்து மருத்துவமனைகளில் கேட்கும்பொழுது பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை,எல்லாம் நிரம்பிவிட்டது,இங்கே ஆக்சிஜன் வசதியும் பற்றாக்குறை என்று சொல்வது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.இந்த செய்தியை கேட்டு கேட்டு எனக்கும் மனம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேதனையளிக்கிறது.கைபேசியை எடுத்தால் கொரோனா பாதிப்பு செய்திதான் வேதனையுடன் சொல்கிறார்கள். இந்த கொரோனா இரண்டாவது அலை எங்கே போய் நிற்கும் எவ்வளவு பாதிப்பு உண்டாக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.
           
என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களும் ஒட்டுமொத்தமாக  தமிழ்நாடு பொதுமக்களும்  கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மிகுந்த ஆவலாக உள்ளது.கொரோனா  ஒழிய வேண்டும்  எல்லோரும் பாதுகாப்பாக,நிம்மதியாக வாழ வேண்டும்,அந்த நாள் மிக விரைவில் வரவேண்டும்.அதுவே நம்முடைய ஏக்கமாக எதிர்பார்ப்பாக இருக்கிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages