மே 12 உலக செவிலியர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மே 12 உலக செவிலியர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

மே 12 உலக செவிலியர் தின வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி              
        
அன்பும் கருணையும் இரக்கமும் கொண்டு தாயுள்ளத்துடன் மக்களின் உயிர் காக்கும் மருத்துவச் சேவையில் அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் செவிலியர்களான சகோதர- சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவச் சேவை மகத்தானது. அதிலும் தற்போது கொரோனா பெருந்தொற்று மனித குலத்தையே தாக்கி வரும் கொடிய நெருக்கடி காலத்தில் தங்கள் குடும்பத்தைக்கூட கவனிக்க முடியாமல் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உயிர் காக்கும் சேவை செய்வது போற்றுதலுக்குரியது. கொரோனா காலத்தில் பணியாற்றும்  செவிலியர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் கூடுதலான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கௌரவப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages