அக்னிப்புரட்சி இன்றைய (13.05.2021) முக்கிய செய்திகள்.
💥தமிழகத்தில் 14ம் தேதி வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் - தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு.
* DRDO வின் Oxycare கட்டகங்களை 1,50,000 எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய ₹322.50 கோடி PM-CARES நிதித் தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்து முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி ஆணை.
கொரோனா வெருவி தடுப்பு மற்றும் இழப்பீடு பணிகள் தொடர்பாக 9 செயலாக்க பரிந்துரைகளை வலியுறுத்தி காங்கிரசு, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதிக்கு கடிதம்
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.84 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.87.49 க்கும் விற்பனை.
* கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி
பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
* திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடரும் உயிரிழப்புகள்! ICU-வில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் இன்று உயிரிழந்ததாக தகவல்.
கடந்த 3 நாட்களில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. முழுமையான விசாரணை நடத்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை.
💥இலங்கை இராணுவம் வெறிச்செயல்! : முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் உடைப்பு; புதிய நினைவுக்கல் காணாமலாக்கப்பட்டுள்ளது!
💥தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துமனைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது
ஆக்சிஜன் ஏற்றி செல்லும் முதல் சரக்குந்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது.
டேங்கர் லாரிகள் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டன.
* மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் வன்முறை நடந்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் ஆளுநர்
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய EMI கட்ட கூடுதலாக 6 மாத காலக்கெடு தர வேண்டும் எனவும் தொழிலாளர்கள் ஊதியத்தில் PF, ESI தொகையை 6 மாதம் பிடித்தம் செய்யக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம்
* காவல்துறையினர் தங்களை கொரோனா வெருவித் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை ஆணையர் அறிவுரை
💥தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 20 ஐ நெருங்குகிறது
மே 12 ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 19.41 ஆக உள்ளது. அதன்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்கள் 5 இல் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு
சென்ற ஆண்டு மயிலாடுதுறையில் பழைய சாலை மீதே புதிய சாலை போடப்படுவதாகவும் இதனால் சாலையின் உயரம் அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும் மயிலாடுதுறை வர்த்தகர் சங்கத் தலைவர் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த முடிவை அறிவித்துள்ளது தமிழக அரசு!
* இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி.
மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்.
தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை 525 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது.
* கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் - வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.
கொரானோ பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்.
மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. திடீர் அவசர செலவினங்களுக்காக புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாராளமாக நிதியுதவி வழங்குங்கள் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.
* Sleeper பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்க தமிழக அரசு முடிவு ஒரு பேருந்துக்கு 10 படுக்கைகள் வரை அமைக்கப்படுகிறது.
* பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தனது ஒரு மாத ஊதியத்தினை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பேரிடர் நிதி கணக்குக்கு வழங்குவார்கள்
- பாமக நிறுவனர் மரு. இராமதாசு அறிவிப்பு
* தமிழகத்தில் கொரோனா பேரிடர் நிதிக்கணக்கில் திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக திமுக தவைலர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
* ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10ம் தேதி நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி அறிவிப்பு
* கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியக்கூடிய பணியாளர்களது ஓய்வு வயது 59 லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
* கடலூர் சிப்காட் தனியார் ஆலையில் பாய்லர் விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
* 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் தனிப்பிரிவை ஏற்படுத்தி, அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு
* தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த குழு அமைப்பு
தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு
* கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத் தொகைகளையும் விடுவிக்க வேண்டும்
மாநில அரசின் கடன் வாங்கும் அளவை உற்பத்தி மதிப்பில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் - முதலமைச்சர்
* தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல்
11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொண்டு வரப்பட உள்ளது - தமிழக சுகாதாரத்துறை
* தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
* சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் - பத்மபிரியா
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா விலகல்.
* சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், தி.மு.கவிற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!
* கொரோனா பாதித்தவர்களுடன் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்க கூடாது
மருத்துவமனைகளில் தற்காலிக படுக்கைகளாக ஸ்ட்ரெச்சர்களை படுக்கைகளாக பயன்படுத்தலாம் -தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
மூடப்பட்ட, செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை தற்காலிகமாக சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்"
"மயானங்களில் உடல்களை தகனம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்"
* நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை காலமானார்.
சிவகங்கை மாவட்டம் அரணையூரில் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.
* நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
* ரெம்டெசிவர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்-சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் கூட்டம் அதிகரிப்பதால் ரெம்டெசிவர் விற்பனை செய்யும் இடம் மாற்றம்.
கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்படும் - தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விலகினார்.
கட்சியின் பொதுச்செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
சொந்தக்காரணங்களுக்காக மநீம கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
கடந்த வாரம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில் தற்போது சந்தோஷ்பாபு விலகல்.
* கோவிஷீல்ட் தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி அதிகரிப்பு.
6 முதல் 8 வாரங்களாக இருந்த இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிப்பு.
வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்.
* கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, பாஜக, சிபிஎம், சிபிஐ, மமக, கொமதேக, தவாக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது.
2.தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகளை அனைத்துகட்சிகளும் முற்றிலுமாக நிறுத்துவது.
3.அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களை அனைத்து கட்சிகளும் அறிவுறுத்துதல்.
4.தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கலாம்.
5. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது.
* மேற்பரப்பை சுரண்டி விட்டுத்தான் சாலை போட வேண்டும்.: நெடுஞ்சாலைத்துறைக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போடவேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, போரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா அதிகம் பாதித்துள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
முதல் கட்டமாக வரும் 18ம் தேதியும், 2ம் கட்டமாக 20ம் தேதியும் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை.
* முழு ஊரடங்கின் தளர்வுகளை பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர்
எனவே இந்த தளர்வுகள் நீட்டிக்கப்படலாமா அல்லது மாறுதல் செய்யலாமா ? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கேள்வி
* தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்"-தமிழக அரசு அறிவிப்பு.
"மானிய சலுகை பெற இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும்"
முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் - தமிழக அரசு.
* கடலூர் சிப்காட் தொழிற்சாலை பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு.
தொழிற்சாலை தரப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 15 லட்ச ரூபாய் கொடுக்க ஒப்புதல்.
கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை நிர்வாகம் முடிவு.
தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் என ஏற்கனவே அறிவிப்பு.
* "நடுவண் அரசை காணவில்லை" என அட்டைப்படம் வெளியிட்ட Outlook இதழ்!
* இக்கட்டான இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் நிறைவை தருகிறது! : சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
* இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது
:நடுவண் சுகாதாரத்துறை
* களப்பணி ஆற்றி வந்த சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை" - துறை கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்குதலுக்கான அரசாணை வெளியீடு
* நாளை முதல் ஊரடங்கு கண்காணிப்பு காவல் துறையினரால் கடுமையாக பின்பற்றப்படும் என அறிவிப்பு!
சென்னையில் ஊரடங்கு முறையாக கண்காணிக்கப்படுவதில்லை எனவும் நாளை முதல் கட்டுப்பாடுகளை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டும். -சென்னை காவல்துறை ஆணையர்
* நாளை முதல் சென்னையில் அரசின் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகராட்சி ஆணையர்
ககன்தீப் சிங் பேடி
* உலகம் முழுவதும் பல தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இருக்கலாம்.
ஆனால் ஒட்டுமொத்த உலகிற்கே தடுப்பூசி வழங்க உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.
- ஆஸ்திரேலிய அரசு
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்கவுள்ளது தமிழக அரசு
கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது
ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்
* முழு ஊரடங்கு மிக கடுமையாக்க - முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு !
* நாளை முதல் சென்னையில் அரசின் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.
லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை. லாக்டவுன் விதிகளை மீறுவோரை கண்காணிக்க 30 குழுக்கள் சென்னையில் அமைப்பு- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
* தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் - அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
கொரோனா நோய்த்தொற்றை கட்டுபடுத்த அனைத்து கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment