அக்னிப்புரட்சி இன்றைய (14.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 94.09 ரூபாய்க்கும், டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து லிட்டர் 87.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஓ.பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பிய நிலையில் இன்று காலமானார்.

* ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; ககன்தீப் சிங் பேடி அதிரடி திட்டம்.

சென்னையில் ஆம்புலன்ஸ் களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை ஏற்றிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இரண்டு நாளில் 250 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்துள்ளார்.

அதாவது கார்களில் ஆம்புலன்ஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஆம்புலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

15 மண்டலங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை ஒரே நாளில் போக்கிய பேடியின் செயல் தற்போது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

*அமெரிக்காவில் முகக்கவசம் அணிய தேவையில்லை : அதிபர் ஜோபிடன் அதிரடி.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்திக் கொண்டவர்கள் பணியிடம் உள்ள பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சிடிசி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை சுமார் 11.7 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்று நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அவர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றவும் அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அதிபர் ஜோ பிடன் செய்தியாளர்கள் மத்தியில் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க தேசிய சுகாதார ஆணையம் இதுவரை 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற அமெரிக்காவின் அறிவிப்பு தடுப்பூசியின் நாட்டமில்லாத மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல் திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் - திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.

பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்.

ஆட்சியின் நடவடிக்கைகளுடன், திமுகவினரும் மக்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும்.

நம்மை தேர்ந்தெடுத்த மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது. அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன்- முதலமைச்சர் ஸ்டாலின்.

* திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழக அரசின் கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதி.

ஆர்டிஜிஎஸ் மூலம் தமிழக அரசின் வங்கி கணக்குக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் அனுப்பினார்.

* நடிகர் அஜித் ரூ.25 லட்சமா? 2.5 கோடியா? குழப்பம் வந்தது ஏன்?

தமிழக அரசின் செய்தி ஊடகத்துறை நடிகர் அஜீத் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 2.5 கோடி நிவாரணம் வழங்கியதாக தவறுதலாக குறிப்பிட்டு பத்திரிக்கைகளுக்கு முதலில் செய்தி அனுப்பியிருந்தது. தற்போது அதை திருத்தி ₹25 லட்சமாக செய்தி வெளியிட்டுள்ளது. இது தான் குழப்பத்திற்கு காரணம்.

* முழு ஊரடங்கின் போதும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சின்னத்திரையில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

* பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று விடுவித்துள்ளார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை, பிரதமர் திரு நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக விடுவித்துள்ளார்.

இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

* இன்று முதல் Remedisivir மருந்து நேரு உள் விளையாட்டரங்கில் பொதுமக்களுக்கு வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது

தேவைப்படுவோர் அங்கு சென்று வாங்கிக்கொள்ளலாம்.

* புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

“நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

“திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் சூறைகாற்றுடன் அதி கனமழை பெய்யும்"

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்.

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

* தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயத்தது தமிழக அரசு.

ஆம்புலன்சிலுள்ள வசதிகளை பொறுத்து ரூ.1000 முதல் 4000 வரை கட்டணம் நிர்ணயம் - தமிழக அரசு.

முதல் 10 கி.மீ தூரத்திற்கு ரூபாய் 1000 கட்டணம். அதற்குமேல் செல்லும் கி.மீ ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.25 கட்டணம் நிர்ணயத்தது தமிழக அரசு.

* ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:
தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக ஆபாஷ் குமார், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவின் ஐஜியாக ஆர்.தினகரன் நியமனம் செய்துள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் எஸ்.பி.யாக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் முதல் நபருக்கு ரஷ்ய நிறுவனத்தின் 'ஸ்புட்னிக் வி' கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் தீபக் சப்ரா என்பவருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான விலையும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு டோஸ், 5 சதவிகித ஜி.எஸ்.டி. உட்பட இந்தியாவில் ரூ.995.40 க்கு விற்கப்படும் என, இதை இந்தியாவில் விரைவில் தயாரிக்கவிருக்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் இன்று கூறியுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள்ளாக இந்தியாவில் இருநூறு கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இலக்கு இறுதி செய்திருப்பதாக நடுவண் அரசு தகவல்

* தனியார் மருத்துவ ஆம்புலன்ஸ்களுக்க (Ambulance) கட்டணம் இறுதி செய்து தமிழக அரசு ஆணை வெளியீடு. கூடுதல் கட்டணம் பெறப்பட்டால் தமிழக அரசின் 104 உதவி எண்ணில் குற்றச்சாட்டு பதியலாம்

* ஒத்திவைக்கப்பட்டுள்ள பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டம்

ஜூன் மாத இறுதிக்குள் யூனிட் தேர்வு ( Unit Test) & மீள்பார்வை தேர்வுகளை ( Revision Test) வாட்சப் வழியாக நடத்தி முடிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை அறிவுறுத்தல்

* தமிழகத்தில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கான கொரோனா வெருவித் தடுப்பூசி செலுத்தும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

💥கொரோனோ வெருவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் (Oxygen) பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் அரசாணை வெளியீடு

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எவ்வாறு கையாள வேண்டும் என நடுவண் அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை. மொத்தமாக சடலங்களை  எரியூட்ட கூடாது என்றும், கூடுதல் மயானங்களை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

கொரோனா நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கு 2022 மாச்சு 31 வரை ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியீடு

* அதிர்ச்சி
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த  சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உடல்நலம் குன்றியதாகவும் அதன் பொருட்டு ஓய்வு எடுக்க விடுப்புக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் எனினும் காவல்துறை மேலிடம் அவரது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல்  அவருக்கு விடுப்பு மறுத்ததாகவும் அதனை தொடர்ந்தே அவர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

* தனியார் நிறுவன காவலாளி கொரோனா நிதியாக தனது 1 மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்கினார்

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் இன்று நேரில் வழங்கினார்

💥கொரோனா துயர்துடைப்பு நிதியாக ₹10 இலட்சம் தேமுதிக சார்பில் முதலமைச்சர் பேரிடர் உதவி நிதிக்கணக்கிற்கு வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

* தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு.

மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணிக்க வரும் 17ஆம் தேதியிலிருந்து இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு

இ - பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

திருமணம் முக்கிய உறவினர்களின் இழப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் முதியவர்களுக்கான தேவை ஆகியவற்றுக்கு இ -பதிவு கட்டாயம்
https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

ஏற்கனவே நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மற்ற கடைகளை திறக்க தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மே 17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் மாவட்டத்திற்குள்ளே செல்லவும் இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை. 

ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல திறக்க அனுமதிக்கப்படுகிறது.
 
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி கிடையாது.

மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.
 
பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

* தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,892 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,31,377  ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 6538 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 288 பேர் பலியாகியுள்ளனர். 

20037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* பலத்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரிப்பு!

* COVAXIN, COVISHIELD உள்ளிட்ட கொரோனா தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ள தமிழகத்தில் உள்ள சென்னை கிங்ஸ் நிறுவனம், செங்கல்பட்டில் உள்ள IVC வளாகம் மற்றும் குன்னூரில் உள்ள பாஸ்டியூர் நிறுவனம் உள்ளிட்ட மூன்று இடங்களை நடுவண் அரசு பயன்படுத்திக் கொள்ள நடுவண் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பரிந்துரை

💥இ- கடவு (pass) முறை அல்ல இ-பதிவு முறை

திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு செல்ல இ பதிவு முறை போதுமானது. சில  ஊடகங்களில் இ பதிவு முறை குறித்து தவறாக செய்தி வெளியிட்டதால் தமிழக அரசு விளக்கம்

* நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு உள்ளிட்ட  5 இந்திய காவல் பணி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை.

💥  IAS அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் நந்தகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறை ஆணையராக  நியமனம்

மேலும் பல்வேறு குடிமைப் பணியில் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை!

* இ-பாஸ் கிடையாது இ-பதிவு மட்டும் தான்- தமிழக அரசு.

அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை.

eregister.tnega.org என்ற தளத்தில்  ஆவணங்களுடன் பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டால் போதுமானது - தமிழக அரசு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages