அக்னிப்புரட்சி இன்றைய (15.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (15.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (15.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.94.09 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.87.81 க்கும் விற்பனை.

* தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை ( covid 19 War Room) நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு, உதவி கேட்டு வந்த அழைப்புக்கு உரிய வசதியை உடனடியாக செய்ய ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.

* தமிழக அரசு அறிவித்தபடி, ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தின் முதல் தவணையான, 2,000 ரூபாய், இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில், இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகி. மதியம், 12:00 மணி வரை வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றி, தினமும் தலா, ஒரு கடையில், 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்காக, கடைகளுக்கு எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களின் வீடுகளில் முன்கூட்டியே வழங்கியுள்ளனர்.

*:தமிழகத்தில் முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தேநீர் கடைகள், நடைபாதை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

* அரபிக் கடலில் உருவானது டக்தே புயல். மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக  18ஆம் தேதி குஜராத் கடற்கரையை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்டே புயலாக உருவானது.

டவ்டே புயல் காரணமாக  தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.

தமிழகம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் டவ்டே புயல் தாக்கம் இருக்கும்.

டவ்டே புயல் வடக்கு, வடக்கு மேற்கு திசையில் நகர்ந்து குஜராத் அருகே மே 18-ல் கரையை கடக்கும்.

5 மாநிலங்களில் புயல் மீட்புப் பணிகளுக்காக 53 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்தன.

டவ்டே புயல் காரணமாக திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடும் சூறைக்காற்று- மழை இருக்கும்.

* வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை.

காணொலியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.

* விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முஹம்மது யூசுப் சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* மே 31 வரை எந்த படப்பிடிப்பும் இல்லை - ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி.

நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தம்.
சினிமா தொழிலாளர்களை காக்க உச்ச நட்சத்திரங்கள் உதவ வேண்டும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயிரிழப்புகள் அதிகம் - ஆர்கே செல்வமணி.

* ரெம்டசிவிர் கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.

ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்குவோர் மீதும் குண்டர் சட்டம் பாயும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

* அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால்  மயானங்களில் சடலங்கள் காத்திருக்கும் நிலையை தடுக்க இணைய பதிவு முறையை கொண்டு வர பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு

மயானங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கண்கானிக்க CCTV பொருத்தவும் முடிவு.

* சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விற்கப்படும் Remdesivir மருந்தை வாங்க அலைமோதும் கூட்டம்!

* தமிழகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவர், தடுப்பூசி ஆகியவற்றை அதிகம் ஒதுக்கக் கோரி தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்.

* தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியுள்ளது.

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை 90 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கிட ஜூன் 5-ம் தேதிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

*:காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல் காட்சிகள், செய்தி தொலைக்காட்சி நேரலையில் பதிவாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலுடன், விமானப்படை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளையும் வீசி வருகிறது. அங்கு செய்தி நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்கள் களத்தில் இருந்து செய்தியை கொடுத்து வருகின்றன.

கடந்த புதன்கிழமை பிபிசி அரபு தொலைக்காட்சி நேரலையில், அந்நிறுவன செய்தியாளர் அட்டன் காசாவில் இருந்து  நிலவரத்தை விளக்கியுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் தெரியும் அல் ஷாருக் கட்டிடத்தின் முன்பாக ஏவுகணையொன்று விழுகிறது. அந்த சத்தம் கேட்டு அவர் திருப்பி பார்க்கும் போது, கட்டிடத்தை குறிவைத்து அடுத்தடுத்து குண்டுகள் வீசப்படுகிறது. 13 மாடிகட்டிடம் சீட்டுக்கட்டை போன்று சரிந்து விழும் காட்சிகள்

* ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்துக்கு ரூ.1 கோடி கொரோனா நிதி உதவி.

ரூ.1 கோடி கொரோன நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் பன்வாரிலால் புரோகித்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கினார் மு.க.ஸ்டாலின்.

உடன் அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இருந்தனர்.

* தமிழகத்தில் 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 303 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் மேலும் 6,640 பேருக்கு தொற்று கண்டறியப்பபட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 82 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துளளனர்.

தமிழகத்தில் 20,905 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

தமிழகத்தில்  2,07,789 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

💥தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா வெருவித் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் ₹7 இலட்சம் இழப்பீடு வழங்குகிறது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு.

💥Bigg Boss நிகழ்ச்சி நிறுத்தப்படுமா?!
சென்னை EVP படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் மலையாள Biggboss நிகழ்ச்சியில் பலருக்கு கொரோனா வெருவித் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒரு ஒளிப்பதிவாளர் மிகவும் கவலைக்கிடமான  நிலையில் மருத்துவம்  பெற்று வருகிறார். 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு என தகவல். எனினும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages