பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பலமுறை போட்டியிட்டவருமான மன்னன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பலமுறை போட்டியிட்டவருமான மன்னன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

வன்னியர் சங்கம் தொடங்கிய காலம் முதல் என்னுடன் இணைந்து பயணித்தவர். வன்னியர் சங்கத்திலும், அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியிலும் ஒன்றிய அளவில் தொடங்கி மாநில அளவில் வரை பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர். கட்சி வளர்ச்சிக்காக உழைத்தவர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக நான் தருமபுரி சென்றிருந்த போது என்னை சந்தித்தார். கடந்த  இரு வாரங்களுக்கு மேலாக  அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்து கவலை அடைந்தேன். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில், அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages