அக்னிப்புரட்சி இன்றைய (18.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் 94.54 ரூபாய்க்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு.

தமிழகத்தில் பயணம் செய்வதற்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது.

உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம்.

* திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு  தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
-  மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

*:மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு- முதலமைச்சர் ஸ்டாலின்.

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை.
காணொலி மூலம் பங்கேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

* தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனம் மூலம் இதுவரை கிடைக்க பெற்ற நிவாரண தொகை 69 கோடி. அவை எதற்காக பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறித்த அரசின் செய்தி குறிப்பு.

* உயிர்வளி, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்.

* தயாராக உள்ள நிறுவனங்களிடமிருந்து, TIDCO நிறுவனம் விருப்பக் கருத்துகளைப் பெற்று ஆலைகளை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கும். தமிழகம் தன்னிறைவு அடையும் - முதல்வர் ஸ்டாலின்.

* இயற்கை மருத்துவத்தால் நலம் பெற்ற 1.20 கொரோனா நோயாளிகள்!

💥புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா துயர்துடைப்பு நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

* கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் உள்ளிட்ட தற்போதைய கேரள அமைச்சர்கள் அனைவருக்கும் இரண்டாவது முறை கேரள முதல்வர்  பினாரயி விஜயனின் அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

* புதிய குழப்பம்!: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பணியிடம் உள்ளதா? நீக்கம்  செய்யப்பட்டுள்ளதா?

பள்ளிக் கல்வித்துறை  ஆணையராக நந்தகுமார் பொறுப்பேற்ற நிலையில், பணியில் இருந்து விலகினார் கண்ணப்பன்.

இயக்குநர் பதவிக்கு உள்ள அதிகாரங்கள் ஆணையர் பதவிக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், "இயக்குனர் பதவி" உண்டா இல்லையா என்பது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து உரிய விளக்கம் ஏதும் வரவில்லை.

* கொரோனா வெருவித் தொற்று 2 வது அலையில் நாடு முழுவதும் 269 மருத்துவர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவர்கள் உயிரிழப்பு - இந்திய மருத்துவ சங்கம் தகவல்

* வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம் -  ககன் தீப்சிங் பேடி.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியேறினால் அபராதம்- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரிக்கை.

முதல் முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும்.

அடுத்தகட்டமாக மாநகராட்சியின் கொரோனா மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

வீட்டுத் தனியமையில் இருப்பவர்கள் வெளியேறினால் 044-25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

* சென்னை அண்ணாசாலை போக்குவரத்து நெரிசல்... இன்று காலை...

* புதுச்சேரி: பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் சொன்ன துணை நிலை அளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

* 2050 க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் பலி.

* கெடுபிடி காட்டும் காவல்துறையினர்:  முன் களப்பணியாளர்களுக்கு இ-பதிவு கட்டாயமா  என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

*:கொரோனா வெருவித் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே சுற்றினால் ₹2000 தண்டம் விதிக்கப்படும். சுற்றுவது தொடர்ந்தால் கொரோனா சிகிச்சை மையத்தில் அடைக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 549 கோரிக்கை விண்ணப்பங்கள்  நிறை வேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

💥திண்டிவனத்தில் போலி ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததால் மருத்துவர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தனியார் மருத்துவமனையின் உரிமம் நீக்கம், ₹ 1 லட்சம் தண்டம் விதிப்பு! - தமிழக அரசு நடவடிக்கை

* 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வெருவித் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

இதற்காக தனியாக 9 லட்சம் ஊசிகள் தமிழகம் வந்துள்ளன - மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்

💥மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரசு சார்பில் கோவில்பட்டியில் சிலை வைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய பள்ளி பழமை மாறாமப் புதுப்பிக்கப்படும்

அவரது படைப்பாளுமை போற்றும் வகையில் அவரின் புகைப்படங்கள்-படைப்புகள் அடங்கிய அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

👆திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறையில் புதிய ரேஷன் அட்டைக்கு ₹500/- கேட்கும் அதிகாரிகள்! அது குறித்து கேள்விக்கேட்டால் எவ்வித அச்சமோ கூச்சமோ இன்றி பதிலளிக்கின்றனர்! என்ற வீடியோ வைரலாகிறது...

* அடையாள அட்டையுடன் முன்களப் பணியாற்றும்  பத்திரிகையாளர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் சென்னை காவல்துறை.                      தமிழக முதல்வர் தலையிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள்

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பத்திரிகையாளர்கள்- ஊடகவியலாளர்கள் தமிழக அரசின் முயற்சிகளுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த ஊடகங்கள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான ஊடகத்துறையினர் ஊரடங்கிலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில்  அடையாள அட்டையுடன் பணியாற்றி வரும் நிலையில், இன்று (19-05-2021) புதன்கிழமை காலையில் இருந்து சென்னை நகரின் பல பகுதிகளில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டு வருகின்றனர். இ பதிவு இருந்தால் மட்டுமே வாகனத்தை அனுமதிப்போம் என்று வாக்குவாதங்கள் செய்து வருகின்றனர்.அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை பெரு நகர காவல்நிலைய எல்லைகளுக்கு இடையில்  இப்படி பல இடங்களில் கடும் சிக்கல்கள் உருவாகி வருகிறது.ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த அரசுக்கும் காவல்துறைக்கும் ஊடகங்கள்  துணை நிற்கும் நிலையில் ஊடகத்துறையினரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்வதும், அவமதிப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

காவல்துறை தலைமையிடம் இருந்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. முறையான அடையாள அட்டை வைத்துள்ள பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களை கடமையைச் செய்ய விடாமல் காவல்துறையினர்  தடுத்து நிறுத்தும் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு காவல்துறைக்கு  உரிய உத்தரவிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகிறது.

பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

💥 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,059 புதியதாக கொரோனா தொற்று.

21,362 குணமடைந்துள்ளனர் - 364 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தலைமை செயலாளர் அறிவுறுத்தல்!

* தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம், மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது, அரசின் கட்டணமில்லா  சேவைகளுக்கு கையூட்டு பெறுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

* கொரோனா கால அனுபவங்கள்
இதுதான் விதியோ
விதியின் சதியோ?
---------------------------------------------

★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.

★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.

★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.

★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.

★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.

★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.

★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.

★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.

கடைசியாக ஒன்று...

நம்முடன் வாழ்ந்து  இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.

விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா.

* 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது தீர்வு நடவடிக்கை தொடங்கியது.

* இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் நிறைய சவால்கள் உள்ளன.
- சீரம் நிறுவனத் தலைவர்

* நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காய்கறி சந்தை நாளை முதல் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் செயல்படும் என அறிவிப்பு

அறிகுறி இல்லாதவர்கள், மிதமான அறிகுறி உடையவர்கள் படுக்கை வசதி தேவைப்பட்டால் சென்னை லயோலா கல்லூரியை அணுகலாம்

ஆக்சிசன் படுக்கைகள் இல்லாததால், தீவிர பாதிப்பு உடையவர்கள் வர வேண்டாம்

அனுமதி தேவைப்படுவோர் 9025452222 என்ற எண்ணில் அழைக்கலாம்
சென்னை லயோலா கல்லூரி அறிவிப்பு

* மருத்துவர்கள் உள்ளிட்ட  அத்தியாவசிய பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஊடக பணியாளர்களுக்கு அடையாள அட்டை மட்டும் போதுமானது: தமிழக அரசு அறிவிப்பு.

* கோவிட் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளுதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages