அக்னிப்புரட்சி இன்றைய (19.05.2021) முக்கிய செய்திகள்.
*சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.94.54 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.88.34 க்கும் விற்பனை
* விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி:
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி.
* சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
* மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்குகிறது.
பிற்பகலில் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி தொடங்கும்.
* இந்தியாவில் பாதிப்பு தொடர்ந்து குறைகிறது!
நேற்று ஒரே நாளில் 3,89,851 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,529 பேர் கொரோனாவுக்கு பலி!
புதிதாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - 2,67,334
* மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொதுச் செயலாளர் முருகானந்தம் விலகல்.
மநீம சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர்.
ஊரடங்கை மதிக்காமல் ஊர்சுற்றும் வாகன ஓட்டிகளின், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் வைத்திருக்கும் திருச்சி மாவட்ட காவல்துறை.
* கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அவை அகற்றப்படும் அல்லது நியாய வாடகை பெறப்பட்டு கோயில் வருவாய் பெருக்கப்படும் - இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு
💥நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ
* பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பணியிடம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறை செயலாளர் தீரஜ் குமாருடன், தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது
ஆணையர் நந்தகுமார் நியமனம், இயக்குநரின் விலகல், பணியிடத்தின் நிலை குறித்து கலந்தாய்வு என தகவல்
* 2 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தி சோதனை மேற்கொள்ள அனுமதியளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு.
மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நிராகரிப்பு.
*:புதிய கேரள அமைச்சரவையில் 21 அமைச்சர்களில் ஒருவர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பினரயி தலைமையிலான LDF க்கு தலித் ஓட்டுகள் 69% கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழக அரசு சார்பில் முழு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் நல்லடக்கம்.
இடைசெவலில் எழுத்தாளர் கி.ரா உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செய்யப்பட்டுள்ளது.
தமிழக வரலாற்றில் எழுத்தளார் ஒருவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
* தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்:
10 மாநிலங்களில் 74% புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் உச்சத்தை எட்டிய பாதிப்பு - நேற்று ஒரே நாளில் 33,059 பேருக்கு தொற்று.
கேரளாவில் நேற்று 31,337 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
* பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை மூடிவிட்டு அதை ஆணையமாக மாற்றுவது தவறானது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
தமிழக அரசின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கல்வியாளர்கள் அச்சப்படுவது முழுக்க முழுக்க நியாயமானது என சீமான் அறிக்கை.
* பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு உதவித் தொகை வழங்கிட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
* தடுப்பூசி சுற்றுலா: Arabian Nights நிறுவனத்தின் புதிய முயற்சி!
* 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழகத்தில் நாளை தொடக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின், திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார்.
* டவுன் பஸ்களில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் தமிழக அரசின் திட்டம்: நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிடப்பட்டது.
* டவ் தே புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்.
காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000; பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.
புயல் பாதித்த குஜராத் மாநிலத்தில், நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவிக்கவும் உத்தரவு.
* 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு:
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்.
மாணவர்கள் விடைகளை எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, PDF வடிவில் அனுப்ப வேண்டும்.
பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்.
கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது சந்தேகம் என்பதால் தேர்வுத்துறை நடவடிக்கை.
*:பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு; பேரறிவாளனின் தாயார் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
* இ-பதிவு புதிய விதிமுறை:
திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகனங்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும் - தமிழக அரசு
மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களின் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டும்- தமிழக அரசு.
அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுனர் பெயர், கைபேசி எண், பயணிப்போர் பெயர், ஒரு அடையாள ஆவணம் அவசியம்.
💥 தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : 365 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 34,875 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
365பேர் உயிரிழந்து உள்ளனர்.
23,863 பேர் குணமடைந்து உள்ளனர்.
* கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யும் சுற்றுப்பயணத்தின் போது வரவேற்போ, கழகத்தினர் சந்திப்போ இருக்க கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்.
💥 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியால் புதுச்சேரியில் வரும் 24ம் தேதி வரை தொழிற்சாலைகள் இயங்க தடை
💥கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் BiggBoss (மலையாளம்) படப்பிடிப்பு நடைபெற்று வந்த சென்னை EVP தளத்திற்கு சென்னை மாநகராட்சி seal வைப்பு!
💥சேலம் மாவட்டத்தில் நாளை முதல் காய்கறி சந்தைகள் மூடப்படுகின்றன. நடமாடும் ஊர்திகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனை நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
💥பள்ளி கல்வித் துறைக்கு இயக்குநர் பதவியே மீண்டும் வேண்டும்...
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை
* மருத்துவ சேவைப்பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கிறது சென்னை மாநகராட்சி!
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பகுதிநேர அடிப்படையில் தன்னார்வத்தோடு மருத்துவ சேவைப்பணி செய்ய மருத்துவர்கள் தேவை.
நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள்
💥உர மானியம் மும்மடங்காக உயர்த்தி நடுவண் அரசு அறிவிப்பு!
உழவர்களின் DAP உரத்திற்கான மானியத்தை ஒரு மூட்டைக்கு ₹500 லிருந்து ₹1500 ஆக உயர்த்தி முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி ஆணை
💥பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி முதலமைச்சர் ஆணை
அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
*:சென்னையில் கொரோனா வெருவித் தொற்றால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லவோ, எரியூட்டவோ பணம் கேட்டால் மாநகராட்சியின் 044-25384520 என்ற எண்ணிலும் 9498346900 என்ற வாட்சப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
💥மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்களை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
No comments:
Post a Comment