2021 சட்டமன்ற தேர்தல் களத்தில்
அதிமுகவை காத்திட்ட அபிமன்யு
மருத்துவர் அய்யா அவர்கள்.
(தவறாமல் படியுங்கள்)
உள்ளஅன்புடையீர் வணக்கம் !
எங்களுடைய
"NO.1 சர்வே குழு"
நடந்து முடிந்த தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பினை வெளியிட்டு இருந்தோம்
அந்த வகையில் அவை 90% சதவிகிதம் சரியாக அமைந்துள்ளதை கண்டு பெருமையடைகிறோம்
அவற்றில் கன்னியாகுமரி கணிப்பு பொய்த்து போய்யுள்ளது
மேலும் அமமுக வாக்கு சதவிகிதம் நாம் தமிழர் கட்சி. மக்கள் நீதி மையம் ஆகியவை குறித்த கருத்து 75% சதவீதமும் மற்றவை அனைத்தும் ஏறக்குறைய 90% சதவிகிதம் சரியாக உள்ளதை மீண்டும் ஒருமுறை பெருமை பட கூறுகின்றோம்
நான் நேற்றைய தினம் ஓர் முன்னோட்ட பதிவினை பதிவிட்டிருந்தேன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற இருப்பவர்களும் தோல்வி பெற இருப்பவர்களும் வருத்தப்பட போவதாக கருத்து வெளியிட்டு இருந்தேன்
அதிமுக பாமக கூட்டணி முன்கூட்டியே முடிவாகிவிட்டது பா.ம.க விற்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிப் பங்கீட்டு முறையில் இதனை கவனத்தில் கொண்டு திமுக தலைவர் அவர்கள்
கூட்டணி பேசிய வகையில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு தொகுதிகளை ஒதுக்கியிருந்தால்
இன்னும் கூடுதலான தொகுதிகளை அந்த அணி பெற்றிருக்கும் இதனைக் கருத்தில் கொண்டு அதன் தலைவர் வருத்தப்படுவார் வருத்தப்படனும் அதுதான் இயற்கை
அதே போன்று அதிமுக பா.ம.க.
தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்ட போதிலும் கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறிய போது அதற்கு ஒதுக்கிய தொகுதிகளை பாமக விற்கு 10 தொகுதிகள் கூடுதலாக வழங்கியிருந்தால்
வடமாவட்டங்கள் முழுவதும் அதிமுக கூட்டணி வலுவாக வெற்றி பெற்று இரண்டு அணிக்கும் இடையே கடும் இழுபறிக்கான சூழ் நிலை ஏற்பட்டிருக்கும்
பாமகவினர் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வேட்பாளர் நின்ற வகையில் பாமக தொண்டர்களை தவிர்த்து மீதமுள்ள பொதுவான வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதில் சற்று தயக்கம் காட்டியது உண்மையே
தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக தலைமை செய்த இந்தத் தவறினை உணர்ந்து வருத்தப்பட்டு இருப்பார்கள் வருத்தப்படனும் அதுதான் இயற்கை
மேலும் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன வெற்றியடைந்தவர்களை வாழ்த்துங்கள் தோல்வியடைந்தவர்களை தோல்விக்கான காரனங்களை கண்டறிய அறிவுரை கூறுங்கள்
அதை விட்டு விட்டு மூத்த பத்ரிகையாளர்கள் என்ற போர்வையில் வன்னியர்களையும் ராதாஸ் அவர்களையும் அழித்தொழிக்கும் வேலையினை மீண்டும் மீண்டும் கையில் எடுப்பது ஜாதிய வன்மத்தின் உச்சம்
நீங்கள் தான் தான் ஜாதிரீதியான களவரங்களுக்கு காரணமானவர்கள் உங்களை அமர வைத்து பேச வைக்கிற ஊடககாரர்களும் களவரகாரர்களே!
மேலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதை காட்டுகிறது
ஜாதி இல்லாமல் இனி தமிழகத்தில் அரசியல் இல்லை என்பதை காட்டுகிறது
அபிமன்யு நிலையிலிருந்த அதிமுக. வினை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய முழு முயற்சியால் வட மாவட்டங்களில் அதிமுக மீட்டு எடுக்கப்பட்டுள்ளது
அதாவது வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பாமக வலுவாக உள்ள பகுதிகளாக கருதப்படுகின்ற இடங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி 32 தொகுதிகள் வரை வென்றெடுத்து இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும் பாமக வெற்றிக்கு அதிமுக வாக்கு வங்கி பயன்படாதபோதும் (அதிமுகவில் இருந்து கொண்டே ஜாதிய வன்மத்தால் பாமக விற்கு எதிராக வாக்கலித்த காரணத்தால்)பல தொகுதிகளிள் தோல்வியுற்ற போதும் அதிமுக வின் வெற்றிக்கு பாமக வின் களப்பணி அளப்பரியது
அவைகள்
1மதுராந்தகம்
2கே வி குப்பம்
3வாணியம்பாடி
4அரக்கோணம்
5ஊத்தங்கரை
6வேப்பனஹள்ளி
7பாலக்கோடு
8பெண்ணாகரம்
9தர்மபுரி
10 பாப்பிரெட்டிப்பட்டி
11 அரூர்
12போளூர்
13ஆரணி
14மயிலம்
15திண்டிவனம்
16 வானூர்
17கள்ளக்குறிச்சி
18கெங்கவல்லி
19ஏற்காடு
20ஓமலூர்
21மேட்டூர்
22எடப்பாடி
23சங்ககிரி
24சேலம் மேற்கு
25 சேலம் தெற்கு
26வீரபாண்டி
27பவானி
28சிதம்பரம்
29புவனகிரி
30ஆத்தூர்
31நன்னிலம்
32வேதாரணியம்.
அதேபோன்று கொங்கு மண்டலங்களில் 22 தொகுதிகளை அதிமுக கூட்டணி வென்றெடுத்து இருக்கிறது
அவைகள்
1 பரமத்திவேலூர் 2குமாரபாளையம்
3மொடக்குறிச்சி
4பெருந்துறை 5கோபிசெட்டிபாளையம் 6பவானிசாகர்
7மேட்டுப்பாளையம்
8சூலூர்
9கவுண்டம்பாளையம்
10கோவை வடக்கு 11தொண்டாமுத்தூர் 13கோயம்புத்தூர் தெற்கு 14சிங்காநல்லூர் 15கிணத்துக்கடவு
16பொள்ளாச்சி
17மடத்துக்குளம் 18உடுமலைப்பேட்டை
19பல்லடம்
20திருப்பூர் வடக்கு
21அவிநாசி
22வால்பாறை
மேலும் சில தொகுதிகளை வென்றெடுத்த அதிமுக அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவலாக வென்றெடுத்த வையாகும்
கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர் முதல்வராக இருப்பதின் காரணத்தினால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொங்கு மண்டலம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது
மற்றபடி தென்பகுதியில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அமைச்சர்கள் போன்றவர்கள் சொந்த செல்வாக்கால் பெரும் பொருளாதாரத்தால் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அதே போன்று திமுக தலைமையிலான கூட்டணி வடமாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்றிய சூழ்நிலை எப்படி இருக்கிறது என்றால் வன்னியர்களுக்கு எதிராக கருதப்படும் சமூகங்களை ஒன்றிணைத்து அதன் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் அதுவும் தட்டுதடுமாறி தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல் துரைமுருகன் போன்ற தலைவர்களுக்கு பாமக கொடுத்த நெறுக்கடிகள் சிந்திக்க வேண்டியவை
ஜாதி இல்லாமல் நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்று யாரும் கூறினால் அது 100% தவறான செய்தியாகும் ஜாதி இல்லை என கூறும் பெரிய கட்சிகள்
கடலூர் போன்ற வடமாவட்டங்களில் வன்னியர்களை தவிர்த்து வேட்பாளரை நிறுத்துவது தானே
கொங்கு மண்டலங்களில் வெள்ளாளர் கவுண்டர்களை தவிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவது தானே
தென்மாவட்டத்தில் முக்குலத்தோர் பகுதியில் அவர்களைத் தவிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவது தானே
திருச்சி போன்ற மத்திய மாவட்டங்களில் முத்தரையர்களை தவிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவது தானே
நெல்லை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நாடார் சமுதாயத்தை தவிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவது தானே
சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் யாதவர்களைதவிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவது தானே
மேலும் சில பகுதிகளில் தொகுதிவாரியாக பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களையும் தவிர்த்து வேட்பாளர்களை நிறுத்திவீர்களா
உதாரணமாக மதுரை மேற்கு தொகுதியில் சௌராஷ்ட்ரா சமூகத்தை தவிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி வீர்களா நிறுத்தி வெல்ல முடியுமா இது அனைத்தும் முடியாதுதானே
அப்புறம் எப்படி பொதுவான கட்சி என்றும் அதன் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் பொய்தானே
அப்படி என்றால் ஜாதிகள் எல்லாம் இல்லை நாமெல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பொய்யாக கூப்பாடு போட்டவர்கள் போ டுகின்றவர்கள் யார் வந்தேறிகளாக கருதப்படுகின்ற மைனாரிட்டி ஜாதியினர் தானே
ஒற்றுமை ஒற்றுமை என்று அமைதியாக பேசி சாதுரியமாக வழிவகுத்து மெஜாரிட்டியாக வாழ்கின்ற சமூகங்களை அழித்து ஒழிப்பது தான் இவர்களது வேலை
ஊருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து கொண்டு பெரும் பதவிகளுக்கெள்ளாம் எல்லாம் ஆசைப்படும் பொழுது பெரும் ஜாதியினர் ஏன் ஆசைப்படக்கூடாது
வடமாவட்டங்களில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற வன்னியர்களுக்கும் ஆதிராவிடர்களுக்கும் சண்டையை மூட்டி விடுவீர்கள்
கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் களுக்கும் அருந்ததியர்களுக்கும் சண்டையை மூட்டி விடுவீர்கள்
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் சண்டையை மூட்டிவிடுவீர்கள்
ஆனால் உங்களுக்கு பெயர் அமைதியானவர்கள் சமூகத்தில் என்ன நியாயம் உழைப்பவன் ஒருவன் ஊதியம் பெறுபவன் வேறொருவன் இதுதானே உங்களுடைய கொள்கை முடிவு
இதுபோன்ற உங்களது சூழ்ச்சி அரசியலை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மருத்துவர் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது அவரை எப்படி விட்டு வைப்பீர்கள்
அவரையும் அவர் சார்ந்த சமூகத்தையும் அழித்தொழிக்க அல்லவா முற்படுவீர்கள் அதைதான் சமீபகாலமாக ஒற்றுமை அப்படி இப்படி என்று பேசி காய் நகர்த்தி வருகிறீர்கள்
அதை தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செய்தீர்கள் அதை தவிடு பொடியாக்கி விட்டார் டாக்டர் ராமதாஸ் அவர்கள்
மேலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்த காரணத்தினாலும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிகம் நெருக்கம் காட்டிய காரணத்தினால் தான்
அதிமுக தோல்வியுற்றது போன்ற தோற்றத்தை உருவாக்க இப்போது முயற்சித்து வருகிறீர்கள் ஊடகங்கள் வாயிலாக
உண்மையில் ஏன் அதிமுக இந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றது
திருமதி வி கே சசிகலா அவர்களின் ஆசியோடு ஆட்சி பீடத்தில் அமர்ந்த இவர்கள் அவர்களுக்குத் துரோகம் செய்த வகையில் தென்மாவட்ட மக்கள் அதிமுக வை புறக்கணித்தார்கள் என்பது உண்மை
அவர்களை புறக்கணித்த வகையில்
அதிமுக அபிமன்யு நிலைக்குச் சென்றது என்பதும் உண்மை
அபிமன்யு நிலையிலிருந்த அதிமுகவை காப்பாற்றிய வகையில் இன்று
"மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அபிமன்யு நிலையில் இருக்கிறார் என்பதும் உண்மை"
டாக்டர் ராமதாஸ் என்று ஒருவர் இல்லை என்று சொன்னால் அதிமுக 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மையான கருத்து பாமகவின் ஆதரவால் அதிமுகவிற்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கிடைக்கப் பெற்று இருக்கிறார்கள் அதனால் எடப்பாடியார் அவர்கள் ஊடகங்களால் கதாநாயகனாக சித்தகரிக்கப்பட்டு வருகிறார் என்பதுதான் உண்மை
ஆனால் அதிமுகவின் ஆதரவால் பாமகவிற்கு ஒன்றும் கிடைக்கவில்லை கிடைக்காது என்பதை நான் முந்தைய கருத்து கணிப்பில் கூறியதை அறியலாம் பாமகவினர் தனித்து நின்று இருந்தாலே 15 தொகுதிகளை வெல்வதோடு மட்டும் அல்லாமல் 50 சட்டமன்றத் தொகுதிகள் வரை திமுக அதிமுக வினை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி 10 சதவீத வாக்குகளைப் பெற்று இருக்கலாம்
அதனைத் தவர விட்டு விட்டார்கள் யாரோ விரித்த சதி வலையில் விழுந்து விட்டார்கள் என்பது எனது கருத்து நான் முன்பே பதிவிட்டு இருந்த பதிவில் சொன்ன கருத்தினை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்அதிமுக பாமக கூட்டணி ஏற்பட்ட வகைகள் பாமகவால் அதிமுகவிற்கு 100% சதவிகிதம் லாபம் அதிமுகவால் பாமகவிற்கு 100%சதவிகிதம் நஷ்டம்
மேலும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு பா.ம.க இட ஒதுக்கீட்டினை கையில் எடுத்து கடும் போராட்டத்தினை நடத்திருந்தாள் பா.ம.க அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் அதோடு 2019 நாடாளுமன்ற தேர்தலில் தணித்து தேர்தலை சந்தித்திருந்தாள்
தர்மபுரி சிதம்பரம் ஆகியவைகளில் வெற்றியும் 8 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தினை பிடித்திருக்கும் அப்போது நடைபெற்ற சட்ட மன்ற இடை தேர்த லில் பாப்பிரெட்டிபட்டி சோளிங்கர் வெற்றியும் மற்ற வடமாவட்டட இடை தேர்தலில் இரண்டாம் இடமும் கிடைத்திருக்க வாய்ப்பும் இருந்திருக்கும் அப்படி நடந்திருந்தாள் அதிமுக ஆட்சியை இழந்து சுக்கு நூராக உடைந்திருக்கும்
பிறகுதேர்தலில் 100 தொகுதிகளில் திமுக விற்கும் பாமக விற்கும் தான் போட்டி இந்திருக்கும் இப்படி நடக்கும் என்பனை முன்கூட்டி தெரிந்து கொண்ட பாமக விற்கு எதிரான தீய சக்திகள் பாமக வை மிக ஷாதூரியமாக அதிமுக கூட்டணியில் சேர்த்து அதன் அசூர வளர்ச்சினை தடுத்து விட்டனர் பாமக இரண்டாம் கட்ட தலைவர்களின் பலவீனத்தை பயன் படுத்தி என்பதே உண்மை இத்தகைய கருத்துகளை உதாசின படுத்தாமல்
இவைகளை மனதில் வைத்துக் கொண்டு இனிவரும் தேர்தல் காலங்களில் சுயபரிசோதனை செய்து கூட்டணி தேவையா என்பதை முடிவு செய்வது பாமகவிற்கு நல்லது ஜாதி ரீதியாக இட ஒதுக்கீட்டுக்காக சங்கம் அமைத்து அதில் வெற்றி பெற்ற பாமக அதையே மீண்டும் கையில் எடுக்க வேண்டும் அதுவே அவர்களுக்கு சிறந்த ஆயுதம்
நீங்கள் மொழிவாரி கொள்கையை கையில் எடுக்க வில்லை !
ஜாதிவாரி கொள்கையை கையில் எடுத்தவர்கள்!!
தனி இடஒதுக்கீட்டை பெறும் வகையில்
ஏன் ஜாதி வாரி கொள்கைகளை கையில் எடுத்தாள் ஆட்சிக்கு வரமுடியாதா?100%சதவீதம் முடியும் தமிழ் நாட்டில் வன்னியர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருக்கிறது
முதலில் மருத்துவர் அவர்கள் சொகுசு வாழ்க்கையில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களையும் அதன் கணவில் இருக்கும் நிர்வாகிகளையும் களை எடுக்க வேண்டும்
உங்களை முன்மாதிரியாக கொண்டு போராட்ட அரசியல் செய்த சந்திரசேகரராவ் அவர்கள் ஆந்திரா தெலுங்கானவில் முதல்வர்
அதே போன்று நீங்கள் திமுக அல்லது அதிமுக கட்சியில் மாறி மாறி கூட்ணி வைத்தாளும் உங்களுக்கு வெற்றி கிடைக்காது உங்கள் வாக்குகளை அவர்கள் சுலபமாக பெற்று விடுவார்கள் நீங்க அந்த இருகட்சியில் உள்ள வன்னியர்களளின் வாக்குகளைதான் பெற முடியும் கூட்டணி வைத்த வகையில் அதற்கு ஏன் கூட்டணி
தனி இடஒதுக்கீட்டு போராட்டத்தினை தீவிர படுத்தினால் தனி இட ஒதுக்கீட்டையும் பெரலாம் இரு கட்சியில் உள்ள வன்னியர்களின் ஆதரவினை பெற்று பெருவாரியான தொகுதிகளை கைபற்றிவிடலாமே அப்படி என்றால் கூட்டணி ஆட்சிதானே ஏற்படும் அதற்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் சொகுசு வாழ்க்கையை துறந்து போராட்ட களத்திற்கு வரவேண்டும்
உதாரணமாக மைலாடுதுறையில் பாமக பலமாக இல்லாத போதும் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாள் பாமக வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியுற்றார்
ஆனால் தின்டுக்கல் ஆத்தூர். சென்னை சேப்பாக்கம். ஆகிய தொகுதிகளில் கூட்டணி பலமாக இருந்தும் வன்னியர்கள் அங்கு இல்லாத காரணத்தால் மிக குறைந்த அளவில்தான் வாக்குகள் பெற முடிககிறது இதனை போன்றுதான் இனி எப்போதும் நடக்கும்
மேலும் பாமக விற்கு தற்போது தேவை போராட்ட களமே அதில் வெற்றி யடைந்தால்தான் தேர்தல் களம் வெற்றி கொடுக்கும்
இதனை கருத்தில் கொள்ளுங்கள் விதைத்ததைதான் அருவடை செய்ய முடியும் விதைக்காததினை எப்படி அருவடை செய்ய முடியும்?
அன்புடன்
மணலூர் க.சுந்தர்ராஜன்
தலைமை நிவாக இயக்குனர்
NO.1 சர்வே குழு
No comments:
Post a Comment