செயல்துடிப்புள்ள இளைஞர் தலித் ரகு மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது - மருத்துவர் இராமதாசு இரங்கல். - Agnipuratchi

செயல்துடிப்புள்ள இளைஞர் தலித் ரகு மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது - மருத்துவர் இராமதாசு இரங்கல்.

Share This

செயல்துடிப்புள்ள இளைஞர் தலித் ரகு மறைவு  மிகவும் வேதனை அளிக்கிறது - மருத்துவர் இராமதாசு இரங்கல்.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவூர்  பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின்  குன்றத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஏ ஆர் கே தலித் ரகு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்த தலித் ரகு,  குன்றத்தூர், கோவூர் பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களிடம்  அவர்களின் நலனுக்காக நானும், பாட்டாளி மக்கள் கட்சியும் செய்த நன்மைகள் குறித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.  பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியை ஏற்றி, அவர்களை அதிக எண்ணிக்கையில் பா.ம.க.வில் சேர்க்க நடவடிக்கை  எடுத்து வந்தார். பா.ம.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் தவறாமல் கலந்து கொள்வார். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.

அண்மையில் நடைபெற்ற வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் 6 கட்டங்களிலும் கலந்து கொண்டவர்.  சென்னையில் நடைபெற்ற முதல்கட்டப் போராட்டத்தில்  கலந்து கொண்டு 3 முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். செயல்துடிப்புள்ள இளைஞரான தலித் ரகு பாட்டாளி மக்கள் கட்சியில் மிக அதிக உயரங்களை தொட வேண்டியவர். ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் மிகவும் இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தலித் ரகுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள்,  பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages