அக்னிப்புரட்சி இன்றைய (21.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.05.2021) முக்கிய செய்திகள்.

*:சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டர் 94.71 ரூபாய்க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.62 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.30 வரை நீட்டிப்பு: நிறுவனங்களுக்கு நவ.30 அவகாசம்.

தனி நபர்கள், 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பர்  30ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.

நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 ஐ வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

* நாளை மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பு.

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை - கே.எஸ்.அழகிரி.

தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

* முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணத்தை வழங்க ₹1030 கோடி ஒதுக்கீடு

* கொரோனா சோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் பெற்றால் 1800 425 3993 என் எண்ணில் புகார் அளிக்கலாம்

* பெருநகர சென்னை மாநகராட்சி  அறிமுகப்படுத்திய Taxi Ambulance சேவைக்கு நடுவண் அரசு பாராட்டு.

* தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான ஆணையை  முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்

💥தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் 2003 ஆம் ஆண்டு பாலியல் குற்ற வழக்கில் குற்றமற்றவர் என கோவா கீழமை நீதிமன்றம் தீர்ப்பு

💥மருத்துவம் பெற்று வந்த நோயாளியின் ஆக்சிஜனை அகற்றியதால் உயிரிழப்பு : கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொடூரம்.

கடலூர் நிகழ்வுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

* தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் 'The Family Man 2' இணையத்தொடரை ஒளிபரப்புவதை நிறுத்தாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை

* தமிழகம் முழுவதும் பரவலாக தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

நேற்று 18-45 வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கே பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போட முடியாத நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

* பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற நடத்தப்படும் NTSE தேர்வு முடிவுகளை https://apply1.tndge.org/nts-result-change என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம்

* கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

* கடலூரில் நடந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

கடலூரில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் ராஜா என்பவர் உயிரிழந்ததாக எழுந்ததாக புகார்

விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

* ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு அங்கீகரிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு.

இரட்டை பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறைக்கு பரிந்துரை- சென்னை உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. தகவல்.

தொலைதூர கல்வியாளர்களுக்கு முறையான பயிற்சி, அனுபவம் கிடையாது-உயர்நீதிமன்றம்.

ஒரே ஆண்டில் நேரடியாக, தொலைதூரக் கல்வி மூலம் பெற்ற பட்டங்களை அங்கீகரிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு.

* ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்-தமிழக அரசு அறிவிப்பு.

பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்குகள் தவிர மற்றவை வாபஸ்.

* திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி:

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி - முதல்வர்.

வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன் - மு.க.ஸ்டாலின்.

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது.

2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு.

சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம்.

தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு.

ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை - ஸ்டாலின்.

மே 2-ம் தேதி முதல் கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ம் தவணை ரூ.2ஆயிரம் வழங்க நடவடிக்கை - முதலமைச்சர்

ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள்.

* அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம்: ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிவிப்பு.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.

அதிமுகவினர், அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுரை.

கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தார், நிலோபர் கபில்.

* பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் - கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து; தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை

தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக புகார்.

மே 19, மே 20 தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக தகவல்.

கொல்கத்தாவில் கொரோனா பாசிடிவ் இருந்தவர்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக அறிவிப்பு.

இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார்.

* கேரளாவில் மே 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

பாதிப்பு குறைந்ததால் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூரில் கடும் கட்டுப்பாடுகள் வாபஸ் -  பினராயி விஜயன்.

💥ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவு கொடுப்பதா? : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கேள்வி

எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது இதே யோசனையை அரசுக்கு முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

* கர்நாடகாவில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு.

அத்திவாசிய பணிகளை தவிர அனைத்து கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் - முதல்வர் எடியூரப்பா.

* கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை எனவும் எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை எனவும் உடனடியாக கொழுமைத்துறை அமைச்சர் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை

* தமிழகத்தில் 36 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று : 467 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 36,184 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

467பேர் உயிரிழந்து உள்ளனர்.
24,478 பேர் குணமடைந்து உள்ளனர்.

* Encryption தவறு காரணமாக ICMR இணையதளத்தில் தரவுகள் முரண் ஏற்பட்டுள்ளது:  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு MedAll நிறுவனம் விளக்கவுரை

* ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் தமிழக அரசு குறைத்த பின்பும் கூடுதலாக விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர்களின் உரிமத்தை நீக்கம் செய்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் ஆணை

💥சூன் 3  ஆம் தேதிக்குள் அடுத்த தவணையாக மேலும்  ₹2000 கொரோனா இழப்பீடு  நிதி வழங்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

* காய்கறி, இறைச்சிக் கடைகளுக்கான நேரத்தை குறைத்தும் பலனில்லை. கூட்டம் குறைந்தபாடில்லை. பல மாவட்டங்களில் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்தபோது, ஊரடங்கை தீவிரப்படுத்தவே கூறினார்கள். கலந்தாய்வு செய்து முடிவெடுக்கப்படும் -முதலமைச்சர் முக ஸ்டாலின்

* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக, கல்வித்துறையுடன் முடிவெடுக்கப்பட்டு வருகிறது
- முதலமைச்சர் முக ஸ்டாலின்

💥ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ₹99,122 கோடியை நடுவண்  அரசுக்கு மாற்ற இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் முடிவு

* பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு!

கடந்த நவெம்பர் - திசெம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
- அண்ணா பல்கலைக்கழகம்

* ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிகழ்வு  குறித்த  அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின் பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages