அக்னிப்புரட்சி இன்றைய (22.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.94.71 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.88.62 க்கும் விற்பனை.

*பொள்ளாச்சி உழவர்களின்  நீண்டகால கோரிக்கையை ஏற்று வரட்டாற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 24 லட்சத்தில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியது தமிழக அரசு!

* இந்திய ராணுவ தளபதி அருணாச்சலபிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது சீனாவுடனான எல்லைகளை அவர் பார்வையிட்டார்.

* தமிழகத்தில் பயன்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

* நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த நோய் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு அம்போடெரிசின் பி என்ற தடுப்பு மருந்தை வழங்கலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்தது.

* ஏர் இந்தியா இணையதளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்: 45 லட்சம் பேரின் தரவுகள் கசிந்தன

* டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும், 36 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

* ஆந்திர மாநிலம் நெல்லூரில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தருவதாக பரவிய தகவலால், ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மருத்துவமனைகளை விட்டு கொரோனா நோயாளிகள் வெளியேறினர். இந்த ஆயுர்வேத மருந்து குறித்து ஐசிஎம்ஆர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் வரும் 29 முதல் 31ஆம் தேதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

* மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.

பொது ஊரடங்கை நீடிக்கலாமா என்பது குறித்து முதல்வர் ஆலோசனை.

பொது ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

* நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி உத்தரவு.

பெரும்பான்மை இல்லாததால் ஷர்மா ஒலி, ஷேர் பகதூர் ஆகியோர் ஆட்சியமைக்க அனுமதி மறுப்பு.

நேபாள நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 12, 19 ஆகிய தேதிகளில் 2கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

* எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்று சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையை ஏற்று 2011 முதல் தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* பங்களாவை காலி செய்ய தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்த நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது. 

ஈபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

* வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் ‘யாஷ்’ புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்கள் தற்காலிக ரத்து.

நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா -சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை ரத்து

* தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

கடந்த 2 வாரங்களில் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் - முதல்வர் ஸ்டாலின்.

* கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முழு ஊரடங்கு காலத்தை பொதுமக்களுக்காக பிறப்பித்தோம். ஆனால் அதை பொது மக்கள் உணரவில்லை.

இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை இன்னும் கடினமாக்க வேண்டியுள்ளது - முதல்வர் ஸ்டாலின்.

* ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூ குறைத்து ஆணை வெளியிட்ட  நிலையில், ஆவின் பால் விலையை குறைக்காமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 11 சில்லறை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து - பால் வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர்.

* முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* கோவை அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த  108 மருத்துவ ஆம்புலன்சில் ஆக்சிஜன் உருளை வெடித்து தீ!

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பில்லை

* இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்;  தமிழகத்தில் 48 பேர் பாதிப்பு.

💥தமிழகத்தில் 40 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று.

இந்தியா முழுவதும் 8848 பேர் பாதிப்பு

குஜராத், மராட்டியம், ஆந்திரா,  மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு

💥அரசு வேலை வாங்கி தருவதாக 104 பேரிடம் ₹6 கோடி  மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது அவரது உதவியாளரே குற்றச்சாட்டு.

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நேற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

💥தில்லியில் தடுப்பூசி மையங்கள் மூடப்படுகிறது!

18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக திறக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி மையங்களை மூடுகிறது தில்லி அரசு

தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் தொடர்ந்து மையங்களை நடத்த முடியாத சூழல் என வேதனை!

எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு

* நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி!

தமிழகத்தில் ஒரு வார தளர்வுகளற்ற தீவிர ஊரடங்கு ?

நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9மணி வரை கடைகள் திறக்க அனுமதி

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய திட்டம்

முழு ஊரடங்கு குறித்து சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

* தமிழகத்தில் மே.24 முதல் மே.31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல் - தமிழக அரசு.

தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நாளை மறுநாள் முதல் அமல்.

முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி.

பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி.

காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.

அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி.

அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி.

இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க அனுமதி.

உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுகள் அனுமதிக்கப்படும்.

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

* தமிழக அரசு அனுமதியைத் தொடர்ந்து கடைகள் அனைத்தும் இன்றே திறக்கப்பட்டன.

மே 24 முதல் லாக்டவுன் என்பதால் இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி.

தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கடைகள் திறக்க அனுமதி.

தமிழகத்தில் இன்றும் நாளையும்  ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.

* ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நாளை மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.

காணொலி வாயிலாக நாளை மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

* இரண்டு நாட்களுக்கு மட்டும் கட்டுப்பாடின்றி பேருந்துகளை இயக்குவது என்பது நகரப் பகுதிகளில் இருந்து ஊரகப் பகுதிகளுக்கு கொரோனாவை விரைவாக பரப்புவதற்கு வழி வகை செய்யும்!

முதலமைச்சர் அருட்கூர்ந்து இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள்

* சிங்கப்பூரை தொடர்ந்து கொரோனா வகையை தன் நாட்டு பெயரை( "Indian Variant" என்று குறிப்பிட்டுள்ள) கொண்டுள்ள அனைத்து பதிவுகளையும் நீக்க பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நடுவண் அரசு அறிவுறுத்தல்

* தமிழகத்தில் இன்றும் நாளையும்  ஒட்டு மொத்தமாக 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சென்னையில்  இருந்து 1500 பேருந்துகளும், கோவை, மதுரை, சேலம் திருச்சி உள்ளிட்ட முதன்மை  நகரங்களில் இருந்து 3000 பேருந்துகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு

💥இன்றும் நாளையும் TASMAC கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு

💥தில்லியில் ஒரு நாளைய கொரோனா வெருவி பாதிப்பு 2200 ஆக குறைந்தது.

* பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள்!

சில மாவட்டங்களில் கொரோனா வெருவிப் பரவல் குறைந்திருந்தாலும் பல மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கிறது

வல்லுநர்கள் - சட்டமன்றக் கட்சிகளுடனான கருத்துக்களின்படி ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற பொது முடக்கம்  செயல்படுத்தப்படுகிறது

COVID-19 வெருவித் தொற்றை கட்டுப்படுத்தப்பட்ட தமிழகம் அமைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
- முதல்வர் முக ஸ்டாலின்

* மறுதேர்வு நடத்தவோ மற்றும் மறுதேர்வு நடத்தும் முறை குறித்து  பல்கலைக்கழகத்துக்கு ஆணை வழங்கவோ அறிவுறுத்துவோ உயர்கல்வித் துறை அமைச்சருக்கோ அத்துறையின் செயலாளருக்கோ அதிகாரம் இல்லை என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தமிழக  முதலமைச்சருக்கு கடிதம்

*:கோவையில் 6 பேர்  கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்

நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோ மானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!

* ஊரடங்கு: விலையும் உயர்ந்தது!
காலைக்கும் மாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில்  காய்கறிகளின் விலை, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது.

* அரசு தெளிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை!

வரும் 23, 24 மற்றும் 28 ஆகிய தேதிகள் முகூர்த்த நாட்கள் என்பதால்  ஏராளமான திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு அறிவிப்பில் திருமணம் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருத்து.

* பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு!

கடந்த நவெம்பர் - திசெம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
- அண்ணா பல்கலைக்கழகம்

💥 தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

448 பேர் உயிரிழப்பு மற்றும் 25,776 பேர் டிஸ்சார்ஜ்.

தற்போது சிகிச்சையில் 2,84,278 பேர் உள்ளனர்.

💥33% பணியாளர்களுடன் வங்கிகள் தொடர்ந்து  செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு

புதிய ஊரடங்கு குறித்த தமிழக அரசின் ஆணை ஆங்கிலத்தில்

💥காவல்துறை எச்சரிக்கை!

அந்தந்த பகுதிகளிலேயே அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள்  வாங்கிக்கொள்ள வேண்டும்!

தளர்வுகளை பயன்படுத்தி பொருட்கள் வாங்குகிறோம் என்ற பெயரில் நகர் முழுவதும் தேவையின்றி சுற்றக்கூடாது.

*:அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை ஆலோசனை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்று அறிவிப்பு.

* கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் நியமனம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages