கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் குழு கூட்டம் 22.5.2021 இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றதில் கலந்துகொண்டுபா. ம.க சார்பில் மிக மிக முக்கியமான கருத்துக்களை ஆலோசனைகளாக எடுத்துச் சொல்லப்பட்டது- பாமக தலைவர் ஜி.கே.மணி
தமிழ்நாட்டில் கும்முடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பது மிகுந்த கவலையளிக்கிறது. அருகில் உள்ள கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தீவிரமாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதால் பாதிப்போர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதே தேதியில் நடைமுறைப்படுத்தியும் குறையவில்லை.
எனவே முழு ஊரடங்கை தீவிரப்படுத்துவது மாநில அளவில் ஆலோசனைக் குழு அமைத்துள்ளது போல் மாவட்ட அளவில், மருத்துவமனைகளில் ஆலோசனைக் குழு அமைப்பது - மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் உள்ள மக்களிடம் கிரமங்கள் அளவில் முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு உண்டாக்குவது - பரிசோதனை செய்து 24 மணி நேரத்தில் ரிசல்ட் கிடைக்க பரிசோதனை மையங்களை அதிகப்படுத்துவது - CT ஸ்கேன் எடுக்க குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்வது- தடுப்பூசி போடுவது - நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மேம்படுத்தப்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்க(UPHC) ளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் துவங்கப்படுவது -அரசு வட்ட, மாவட்ட, மருத்துவமனைகள் அனைத்திலும் தேவையான அளவிற்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் மிக மிக அதிகப்படுத்துவது - நோயாளிகள் வந்தால் காத்திருக்க வைக்காமல் உடனடியாக சேர்த்து படுக்கைகள் கொடுப்பது
அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்குவது - தேவையான அளவிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்வது - அனைவருக்கு தடுப்பூசி போடுவது - அவசியம் தேவைப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாக ரெம்டெசிவிர் ஊசி போடுவது - ஊராட்சிகளுக்கு தேவையான அளவில் பிளீச்சிங் பவுடர் மருந்து தெளித்தல் - உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவ படுத்துவதும் பணியின் போது இறந்தவர். களுக்கு கூடுதலான இழப்பீடு வழங்குவது -இறந்த நோயாளியின் குடும்பங்களுக்கு இழப்பீடு ரூபாய் ஒரு இலட்சம் வழங்குவது -
ஒரு தடுப்பூசி ரூபாய் 400 விலையில் நபருக்கு இரண்டு வீதம் போடும் செலவு உள்ளிட்ட ஒருவருக்கு ரூ 1,000 எனில் 6 கோடி தடுப்பூசிகளுக்கு ரூ 6000 கோடி செலவளிப்பதை விட மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது செங்கல்பட்டில். தொடங்கப்பட்ட ஒருங்கிணந்த தடுப்பூசி வளாகத்தில் உலகத் தரம் வாய்ந்த ஒரு தடுப்பூசி ரூ50 க்குள் தயாரிப்பதை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தலாம் - தற்போது புதிதாக பரவி வரும் கருப்பு பூஞ்சை (BLACK FUNCUS) நோய்க்கு ஆம்போடெரிசின் மருந்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வாங்க வேண்டும் .
கொரோனா பாதிப்பு நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பது உள்ளிட்ட மேலும் பல கருத்துக்களை கூட்டத்தில் ஆலோசனைகளாக தெரிவிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு சற்று கசப்பான மருந்தாக இருந்தாலும் உயிர் காக்க கடைப்பிடிக்க ஒத்துழைக்க வேண்டும்.
Home
அண்மை செய்திகள்
கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் குழு கூட்டம் 22.5.2021 இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றதில் கலந்துகொண்டுபா. ம.க சார்பில் மிக மிக முக்கியமான கருத்துக்களை ஆலோசனைகளாக எடுத்துச் சொல்லப்பட்டது- பாமக தலைவர் ஜி.கே.மணி
கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் குழு கூட்டம் 22.5.2021 இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றதில் கலந்துகொண்டுபா. ம.க சார்பில் மிக மிக முக்கியமான கருத்துக்களை ஆலோசனைகளாக எடுத்துச் சொல்லப்பட்டது- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment