அக்னிப்புரட்சி இன்றைய (25.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டர் 95.06 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை.
பள்ளியில் உள்ள வேறு சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாக ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்.
ராஜகோபாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
பின்பு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்.
* கொரோனா பரவல் காரணமாக ஜப்பான் மற்றும் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
* பாலியல் புகாரில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜுன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
* இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?
மத்திய அரசின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
ஆனால் விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை நிறுவனங்களிடம் இருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த கூ ஆப் மற்றும் புதிய சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளது.
* முழு பொதுமுடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு என்று தனிக்குழு அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
* இணைய வழி வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட உள்ளது தமிழக அரசு!
இணையவழி வகுப்புகளில் ஆசிரியர்கள் - மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்.
💥40 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரு நாள் கொரோனா வெருவி பாதிப்பு 2 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,96,427 பேருக்கு கொரோனா வெருவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3,26,850 பேர் மீண்டனர்.
3,511 பேர் உயிரிழப்பு.
* மூவளை ஊர்தி /தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு
* சென்னை PSBB பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி முதல்வர், நிர்வாகி, முதன்முதலாக அந்தச் செய்தியைப் பதிவேற்றம் செய்த கிரிபாலி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது
* தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 18 அமைப்புசாரா நல வாரியங்களில் 69 தொழில்களில் ஈடுப்பட்டுள்ள 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள் பதிவு செய்யும் பணிகள் மற்றும் புதுப்பித்தல் முடுக்கி விடப்பட்டுள்ளது - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்
* PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து குற்றச்சாட்டு அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு பதிந்துள்ளனர்
* தமிழகத்தில் உள்ள திருக்கோயில் நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் இணையத்தில் பதிவேற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணை
முறைகேடுகளில் ஈடுபடும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை
* Casirivimab & Imdebimab என்ற 2(Antibody Cocktail) மருந்துகளின் கலவை அடங்கிய கொரோனா வெருவி எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்
முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்பு கொரோனா வெருவித் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது
இந்த மருந்து ஒன்றின் விலை ₹59,750 ஆகும்.
* வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க காரைக்கால் மாவட்ட நிர்வாகம் எற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் மருத்துவ உதவிகள் பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப கொழுமை மையத்தின் தொடர்பு எண்களையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது
* ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹ 3 குறைத்த பிறகு திருச்சியில் நாளும் 3 ஆயிரம் லிட்டர் கூடுதலாக விற்பனை
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட நீர்வள தலைமை பொறியாளர் அசோகன் மீண்டும் அதே பணியில் நியமனம்
* கொரோனா வெருவித் தடுப்பு பணிக்காக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அழைப்பு
* NEET தேர்வு தமிழகத்தில் நடைபெறாது
தமிழக சட்டப்பேரவை கூடியதும் இதற்கு தீர்வு காணப்படும்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
* தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பிற மாவட்டங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் நேரடியாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* சென்னையில் 3 சக்கர வாகனம், தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை வியாபாரம் செய்பவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினால் புகாரளிக்கலாம்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044 45680200 மற்றும் 94999 32899 எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
* Ph.D., சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை சூன் 30 வரை நீட்டித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார் அறிவிப்பு
* கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய குழுவை அமைத்தது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
* உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட மதுரையில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் கொரோனா வெருவித் தொற்று மருத்துவ பிரிவில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், கணினி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
* BlackLivesMatter என உலகையே முழங்கவைத்த ஜார்ஜ் ஃபிலாய்டின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று!
💥கொரோனா வெருவித் தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பமா?
பதிவு செய்திடுங்கள்: https://ucc.uhcitp.in/ngoregistration
* கடந்த 21 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட செய்திக்கு விளக்கம்: சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அரிசி அட்டையாக மாற்றுவதற்காக விண்ணப்பித்துள்ள சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ₹4,000 கொரோனா நிவாரண தொகை கிடையாது .
அதேநேரத்தில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை உண்டு. அதாவது, மே 2 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே...
* இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.
தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.
* தமிழகத்தில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று : 468 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 34,285 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
468 பேர் உயிரிழந்து உள்ளனர்.
28,745 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.
* செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்.
* தமிழகத்தில் 21 குடிமைப் பணியில் அலுவலர்கள் இடமாற்றம்
பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷாவை நியமித்து தமிழக அரசு ஆணை
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளராக மணிவாசன் நியமனம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மாற்றப்பட்டு, அவருக்கு பதில் குமார் ஜெயந்த் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக நியமனம்
* அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்
- சென்னை வானிலை ஆய்வு நடுவம்
* திருச்சிராப்பள்ளியில் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான உதவிகளுக்கு 0431 - 2461265 என்ற எண்ணை காலை 8 மணி முதல் மாலை 4 வரை தொடர்பு கொள்ளலாம்
💥நடுவண் புலனாய்வு செயலகத்தின் இயக்குனராக இந்திய காவல் பணி அலுவலர் சுபோத் குமார் ஜைசுவால் நியமனம்.
💥சரக்கு மற்றும் சேவை வரி குழு கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்வார்
No comments:
Post a Comment